அதெல்லாம் இந்தியா வர முடியாது.. வங்கி கொள்ளையன் நீரவ் மோடியின் கூட்டாளி மெஹூல் சோக்சி திமிர் கடிதம்
நீரவ் மோடியின் உறவினரும், பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் முக்கிய புள்ளியான மெஹுல் சோக்சி இந்தியா திரும்பி வர முடியாது என்று கடிதம் அனுப்பியுள்ளார்.
Recommended Video

டெல்லி: நீரவ் மோடியின் உறவினரும், பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் முக்கிய புள்ளியான மெஹுல் சோக்சி இந்தியா திரும்பி வர முடியாது என்று கடிதம் அனுப்பியுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.

இந்த வழக்கில் பலர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். சிபிஐ நீரவ் மோடியின் உறவினரான மெஹுல் சோக்சிக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது.
அவரை உடனடியாக இந்தியா வர சொல்லி மெயில் அனுப்பி உள்ளது. ஆனால் மெஹுல் சோக்சி தான் இந்தியா வர முடியாது என்றுள்ளார்.
அவர் தனது மெயிலில் ''எனக்கு இப்போதுதான் 6 மாதம் முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. என்னால் அதிகம் பயணம் செய்ய முடியாது. என்னுடைய பாஸ்போர்ட்டை வேறு முடக்கி இருக்கிறார்கள். என்னால் இந்தியா வர முடியாது'' என்றுள்ளார்.
மேலும் எனக்கு இங்கே நிறைய வேலை இருக்கிறது என்றும் கூறியுள்ளார். நீரவ் மோடியும் இதே பதிலைத்தான் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications