2038 வரை தந்தையின் பங்களாவை மீராகுமார் பயன்படுத்தலாம்: மத்திய எஸ்டேட் துறை
டெல்லி: லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தனது தந்தையின் பெயரில் தொடங்கப்பட்ட பவுண்டேஷனுக்காக டெல்லி, கிருஷ்ண மேனன் மார்க்கில் ஒதுக்கப்பட்ட 6ஆம் எண் பங்களாவில் மேலும் 25 ஆண்டுகள் வசிப்பதற்கு உரிமை உள்ளது என விளக்கம் அளித்துள்ளது மத்திய எஸ்டேட் துறை.
தலித் தலைவரான ஜெகஜீவன்ராம் துணைப் பிரதமராகவும் இருந்தவர். இவரது மகள்தான் மீரா குமார். 1980ல் அமைந்த 7 வது மக்களவை மற்றும் 1984ல் அமைந்த 8 வது மக்களவைக்கு தற்காலிக தலைவராக இருந்தவர். மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியில் துணைப் பிரதமராக இருந்த ஜெகஜீவன் ராம் 1986ல் அவர் இறக்கும்வரை 40 ஆண்டு காலம் எம்பியாக இருந்தவர்.

பாபு ஜெகஜீவன் ராம் மறைவுக்குப் பின்னர் அவரது மகளான மீரா குமார் மற்றும் ஜெகஜீவன் ராமின் குடும்பத்தினர், கடந்த 1986ம் ஆண்டு கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள 6ஆம் எண் பங்களாவில் தொடர்ந்து வசித்து வந்ததாகவும், அன்று முதல் அவர்கள் இதுவரை வாடகை பாக்கியாக ரூ.1,98,22,723 வைத்துள்ளதாகவும் பில் தயாரிக்கப்பட்டு மீரா குமாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆர்டிஐ பதில் குறித்து மீரா குமார் அலுவலகத்தில் விளக்கம் கேட்டபோது, மறைந்த ஜெகஜீவன் ராம் குடும்பத்தினர் யாரும் அந்த பங்களாவில் அப்போது வசிக்கவில்லை என்றும், 2002ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதியே அங்கிருந்து அனைவரும் காலி செய்து விட்டனர் என்றும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து மத்திய பொதுப்பணித்துறை, எஸ்டேட்ஸ் பிரிவு இயக்குநர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீரா குமாருக்கு வாடகை வரியாக அறிவிக்கப்பட்ட ரூ.1,98,22,723யை தள்ளுபடி செய்து மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேலும் 25 ஆண்டுகள் அதாவது வரும் 2038ம் ஆண்டு வரை தந்தையின் பங்களாவை சபாநாயகர் மீராகுமார் பயன்படுத்தலாம் எனவும்,அதற்கான உரிமை அவருக்கு உள்ளது எனவும் ஆர்டிஐக்கு விளக்கமளித்துள்ளது மத்திய எஸ்டேட் துறை.
உண்மையில் இந்த பங்களாக ஜெகஜீவன் ராமின் பெயரில் தொடங்கப்பட்ட பவுண்டேனுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications