சபாநாயகர் மீரா குமாருக்கு ரூ.36 கோடி சொத்து
பாட்னா: லோக்சபா சபாநாயகர் மீராகுமாருக்கு ரூ.36 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலம் சசராம் (தனி) தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் மீரா குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், அபிடவிட்டில் தனக்கு ரூ.36 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2009-ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், ரூ.10 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாகக் கூறியிருந்தார். அவரின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் மூன்றரை மடங்கு அதிகரித்து ரூ.36.49 கோடியாக உள்ளது.

அவர் வைத்திருந்த நகைகள், வீடுகளின் மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளதே, இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகை உள்ளிட்ட அசையும் சொத்து ரூ.1.57 கோடி, வங்கிகளில் வைப்புத் தொகையாக ரூ.1.46 கோடி இருப்பதாக தெரிவித்துள்ளார். மீரா குமார் 2013 2014ம் நிதியாண்டில் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கில், தனக்கு ஆண்டுக்கு ரூ.56.46 லட்சம் வருமானம் வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
தனக்கு பாட்னா மற்றும் டெல்லியில் வீடுகள், பங்களாக்கள், பிளாட்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவற்றின் மதிப்பு ரூ.34 கோடி.
அவரின் கணவர் மஞ்சுள் குமாருக்கு அசையும், அசையா சொத்துகளாக ரூ.1.97 கோடி, வங்கி வைப்புத்தொகையாக ரூ.50 லட்சம், டெல்லியில் வீடு, இரண்டு கார்கள் உள்ளதாக மீரா குமார் குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications