அவசர அவசரமா.. மனைவியை கட்டிப்பிடித்து.. மெட்ரோ ஸ்டேஷனில் கணவர் செய்த வேலையை பாருங்களேன்.. ஓ மை காட்
கொல்கத்தா: மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் நடந்த இந்த சம்பவம், வீடியோவாக வெளியாகி காண்போரை பதற செய்து வருகிறது. என்ன நடந்தது?
கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லி மெட்ரோ ரயிலின் இளம்பெண் ஒருவர் அரைகுறையாக டிரஸ் செய்துகொண்டு பயணம் செய்தார்.. அந்த டிரஸ் பார்ப்பதற்கே படுமோசமாக இருந்தது.. நீச்சல் உடை அணிந்தபடியே, மெட்ரோவில் ஏறி உட்கார்ந்திருந்தார்..
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.. ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மெட்ரோவில், அதுவும் தலைநகரில், இப்படி ஒரு கோலமா? என்று அதிர்ந்து கேட்டார்கள் இணையவாசிகள்..

நீச்சல் டிரஸ்: இதற்கு பிறகு, மெட்ரோ சார்பில் ஒரு அறிக்கை வெளியானது.. "டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் சமூக அந்தஸ்து பேணும் வகையில் கண்ணியமான உடைகளை அணிந்து வருவார்கள் என டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் எதிர்பார்க்கிறது. இது போன்ற ஆடைகளை அணிந்து சக பயணிகளின் உணர்வுகளை அவமதிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கிறோம்.
அதேபோல் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மற்றும் மெயின்டனன்ஸ் சட்டத்தின்படி, பிரிவு 59 இன் கீழ் கண்ணியமற்ற அநாகரீகமாக ஆடை அணிந்து பயணிப்பது குற்றமாகும்.. பொது போக்குவரத்தில் இது போன்ற அநாகரிகமாக ஆடை அணிந்து வருவதைத் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த வாரமே இன்னொரு கன்றாவி இதே டெல்லி மெட்ரோ ரயிலில் நடந்தது.
ஆபாச வீடியோ: கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என ஏராளமானோர் அந்த மெட்ரோ ரயிலில் அன்றைய தினம் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு இளைஞர், தன்னுடைய செல்போனில் ஆபாச வீடியோவை பார்த்து கொண்டிருந்தவர், டக்கென சுயஇன்பத்தில் ஈடுபட துவங்கிவிட்டார்..
ஆபாச படம்: இதை பார்த்த சில பெண் பயணிகள், அதிர்ச்சி அடைந்து, அலறியடித்து கொண்டு, தங்கள் இருக்கைகளை விட்டு வேறு இடத்தில் போய் உட்கார்ந்துகொண்டனர்.. இந்த வீடியோ வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. இளைஞர் அந்தரங்க செயலில் ஈடுபட்ட சம்பவத்தை கண்ட டெல்லி மெட்ரோ நிறுவனமும், இன்னொரு எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டது. ஆனால், இந்த முறை டெல்லி மகளிர் ஆணையம் இந்த விஷயத்தில் தலையிட்டது.. இதுகுறித்து விளக்கத்தையும் மெட்ரோவிடம் கேட்டிருந்தது.
இப்படி நாளுக்கு நாள் மெட்ரோ ரயில் குறித்த செய்திகள் பரபரப்பை கிளப்பி வரும்நிலையில், இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மெட்ரோவின் நோபரா ரயில்வே ஸ்டேஷனில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.
कोलकाता नोवापारा मैट्रो स्टेशन पर प्रेमी युगल ने ट्रेन के आगे लगाई छलांग....... pic.twitter.com/I2aDi7GVHo
— Chandan Pandey(चंदन पांडेय) (@Realchandan21) June 4, 2023
படுபிஸி: சாயங்காலம் நேரத்தில், அந்த மெட்ரோ ஸ்டேஷனே படுபிஸியாக காணப்படுகிறது.. நோபரா ரயில் நிலைய பிளாட்பாரத்தில், ஒரு தம்பதியினர் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.. முன்னால் மனைவி நடந்து செல்கிறார்.. அவருக்கு பின்னால், கணவர் நடந்து செல்கிறார்.. அப்போது தண்டவாளத்தில் மெட்ரோ ரயில் வருகிறது.. ரயில் வருவதை அந்த கணவர் பார்த்துவிட்டார்.
உடனே பிளாட்பாரத்தில், தனக்கு முன்னே நடந்து சென்று கொண்டிருந்த மனைவியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்துக்கொண்டார்.. பிறகு, அவரை கட்டிப்பிடித்தவாறே, மெட்ரோ ரயில் முன்பு குதித்துவிட்டார்.. இந்த வீடியோவை பார்த்து பலரும் பதறிப்போய்விட்டனர்.. அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது.. ஆனால், ரயிலில் குதித்த தம்பதியை, அங்கிருந்த மெட்ரோ ஊழியர்கள் உடனடியாகக் காப்பாற்றி விட்டார்கள்..
என்ன காரணம்: இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கவி சுபாஷிலிருந்து தக்னேஷ்வர் வரையிலான மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக ரயில்வே துறை ஊழியர்கள் சொல்கிறார்கள்.. ஆனால், அந்த கணவனுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. விசாரணை நடந்து கொண்டிருந்தாலும், இந்த வீடியோவின் பரபரப்பு மட்டும் இன்னும் கொல்கத்தாவில் அடங்கவில்லை.












Click it and Unblock the Notifications