Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமூக வலைத்தளங்களில்.. வரும் போலி முதலீட்டு விளம்பரங்களை நம்ப வேண்டாம்! மத்திய அரசு எச்சரிக்கை

The Ministry of Home Affairs has issued a warning regarding increasing online investment and job scams in India. Citizens are urged to be cautious of fraudulent advertisements and report suspicious activities to the authorities immediately.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இணையப் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இதற்கிடையே முதலீடு மற்றும் பகுதி நேர வேலை எனச் சொல்லி மோசடிகள் மூலம் மக்களை ஏமாற்றும் போலியான விளம்பரங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

போலி விளம்பரங்கள் மற்றும் போலி வீடியோக்கள் மூலம் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு மோசடிகள் நடைபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. உதாரணமாக, பெகம் பஜாரை சேர்ந்த 25 வயது நபர் ₹12.56 லட்சம் இழந்ததை இழந்துள்ளார். அதேபோல பெங்களூரை சேர்ந்த 57 வயது பெங்களூர் பெண் ₹3.75 கோடி இழந்துள்ளார். பொதுமக்கள் இத்தகைய மோசடிகளைத் தேசிய சைபர் குற்ற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற உதவி எண்ணிலோ புகாரளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், பெகம் பஜாரைச் சேர்ந்த 25 வயது இளைஞர், போலியான செயலி மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடியில் ₹12.56 லட்சம் இழந்தார். மோதிலால் ஓஸ்வால் லோகோவுடன் வந்த இன்ஸ்டாகிராம் விளம்பரம் உண்மையானது என்று நம்பி அதை கிளிக் செய்துள்ளார்.

அது அவரை ஒரு வாட்ஸ்அப் குழுவிற்கு அழைத்துச் சென்றுள்ளது. அங்கே நிதி ஆலோசகர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்ட மோசடி பேர்வழிகள், அவரை Modma என்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம் முதலீடு செய்ய வற்புறுத்தினர். ஆரம்பத்தில் சிறிய தொகை முதலீடு செய்தபோது, பெரிய லாபம் கிடைத்தது போல அந்த அப்ளிகேஷனில் காட்டி நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனால் அதிகப் பணத்தைப் போட்டுக் கொண்டே போய் உள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தை எடுக்க முயன்றபோது, கூடுதலாக ₹7.6 லட்சம் செலுத்த சொல்லிக் கேட்டுள்ளது. அதைக் கட்ட மறுத்தபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்.

மற்றொரு சம்பவத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்ற போலி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இந்த வீடியோக்களில், ₹22,000 முதலீடு செய்தால் மாதந்தோறும் ₹50,000 வருமானம் தரும் அரசு முதலீட்டு திட்டத்தை அவர் தனிப்பட்ட முறையில் ஊக்குவிப்பதாகக் காட்டப்பட்டு இருந்தது. இந்த வீடியோக்கள் போலியானவை என்று அரசு பலமுறை தெளிவுபடுத்திய போதிலும், பலர் இந்த மோசடிகளுக்கு ஆளாகியுள்ளனர்.

இதேபோல், பெங்களூரை சேர்ந்த 57 வயதுப் பெண் ஒருவர், சத்குரு ஒரு பங்கு வர்த்தக தளத்தை விளம்பரப்படுத்துவது போன்ற ஒரு போலி வீடியோவால் ₹3.75 கோடியை இழந்தார். மிரோக்ஸ் என்ற பெயரில் மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு, வீடியோ அழைப்புகள் மூலம் ஷேர்மார்கெட் கிளாஸ்களை நடத்தியுள்ளனர். இது உண்மையானது என்று நம்பி, அவர் பெரும் தொகையை முதலீடு செய்தார். அந்த பணமும் போய்விட்டது.

இத்தகைய போலி முதலீடு மற்றும் வேலை விளம்பரங்கள், பெரும்பாலும் கற்பனைக்கு எட்டாத லாபம் அல்லது ஈஸியான வருவாயை உறுதியளிக்கின்றன. இவை பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் நோக்குடன் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இதுபோன்ற மோசடிகள் அதிகரிக்கும் நிலையில், இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) அதன் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் ஆன்லைன் நிதி மோசடிகளைத் தேசிய சைபர் குற்ற அறிக்கை இணையதளத்தில் (www.cybercrime.gov.in) அல்லது 1930 என்ற உதவி எண்ணில் புகாரளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளைக் கொண்ட போலி விளம்பரங்கள் மற்றும் போலி வீடியோக்களைக் கண்டறிந்து நீக்குமாறு சமூக வலைத் தளங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சைபர் டோஸ்ட் உடன் விழிப்புடனும், பாதுகாப்பாகவும் இருங்கள். நீங்கள் பாதிக்கப்பட்டால், உடனடியாக 1930 அல்லது cybercrime.gov.in இல் புகாரளியுங்கள்.

YouTube - https://youtube.com/@cyberdosti4c

Instagram- https://www.instagram.com/cyberdosti4c?igsh=c2tteTd5Mjl2b2cw

Facebook- https://www.facebook.com/share/1KVuL1aJ9y/?mibextid=wwXIfr X- https://x.com/cyberdost?s=11

Whatsapp- https://whatsapp.com/channel/0029Va3VAOY8fewrOtXqMw1V

Daily hunt - https://m.dailyhunt.in/profile/I4C_MHA

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+