400 மணி நேர மீட்பு போராட்டம் வெற்றி.. சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் நெகிழ்ச்சி!
உத்தர்காசி: உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 17 நாள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. சுரங்கப்பாதையில் சிக்கிய அனைத்து தொழிலாளர்களூம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி அருகே சில்க்யாரா - பார்கோட் இடைய 4.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி அன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென சுரங்கம் இடிந்து விழுந்தது. உள்ளே தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த இடத்தில் பாதிப்பு ஏற்படாத போதும், நுழைவு வாயிலில் பாறைகள் சரிந்து மூடியதால் 41 தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

இந்த சுரங்கத்தில் ஏற்கனவே இருந்த 6 அங்குல பைப் சேதமடையாமல் இருந்ததால், அதன் வழியாக வாக்கி டாக்கியை அனுப்பி அவர்கள் உயிருடன் இருப்பதை மீட்புக் குழுவினர் உறுதி செய்தனர். தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக, உடனடியாக, குழாய் வழியாக ஆக்சிஜன், உணவு, மாத்திரைகள் ஆகியவை வழங்கப்பட்டன. சாதாரண உணவுகளை சாப்பிட்டால், இயற்கை உபாதைகளை கழிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், விண்வெளி வீரர்களுக்கான உணவு முறைகளே பின்பற்றப்பட்டு வருகின்றன.
உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களின் மன அழுத்தத்தைப் போக்க ரம்மி, லூடோ, செஸ் அட்டைகளை குழாய் வழியாக அனுப்பினர். மேலும், மன அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சுரங்கத்தில் 57 மீட்டர் தூரத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதை கண்டறிந்த அதிகாரிகள் எளிதாக மீட்டுவிடலாம் என நினைத்தனர். ஆனால், மீட்புப் பணியில் ஒவ்வொரு நகர்வும் கடும் சவாலாக இருந்து வருகிறது.
இதனால், 15 நாட்களைக் கடந்து மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன. மீட்புப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்காவில் இருந்து நவீன துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து சுரங்கத்துறை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். கிடைமட்டமாக துளையிட்டுச் சென்று, தொழிலாளர்களை மீட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மீட்புக் குழுவினர் கிடைமட்டமாக ஆகர் இயந்திரத்தை கொண்டு துளையிட்டு உள்ளே நகர்ந்து கொண்டிருந்தனர். இதில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஆகர் இயந்திரம் பொருத்தப்பட்ட கான்கிரீட் தளம் திடீரென சேதமடைந்தது. இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. முன்னதாக ஆகர் இயந்திரம் துளையிடும்போது இரும்பு ராடு குறுக்கிட்டதால் அதனை வெட்டுவதற்கு ஆறு மணி நேரம் தாமதம் ஆனது குறிப்பிடத்தக்கது. சுரங்க இடிபாடுகளில் அதிக அளவு இரும்பு கம்பிகள் இருப்பதால் எந்திரம் மூலம் இரும்பு கம்பிகளை வெட்டி எடுக்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.
இதையடுத்து, எலி துளை சுரங்க நிபுணர்கள் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ அழைக்கப்பட்டனர். அவர்கள் இடிபாடுகள் வழியாக கைமுறையாக துளையிடும் பணியை நேற்று (நவம்பர் 27) தொடங்கினர். இதுகுறித்து, நுண் சுரங்கப்பாதை நிபுணர் கிறிஸ் கூப்பர் கூறுகையில், "எங்கள் குழு திங்கள்கிழமை இரவு 50 மீட்டர் துளையிடுதலைக் கடந்துள்ளது. ஏனெனில் நாங்கள் எந்த தடையையும் சந்திக்கவில்லை. நேற்றிரவு மிக நன்றாக சென்றது. 50 மீட்டரைத் தாண்டிவிட்டோம். இன்னும் 5-6 மீட்டர் தூரம் மட்டுமே மிச்சம் உள்ளது. நேற்று இரவு எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. இது மிகவும் சாதகமாகத் தெரிகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
எலி துளை துளையிடும் பணியைப் பொறுத்த வரை, கட்டுமானத்தில் உள்ள சுரங்கப்பாதையின் இடிந்த பகுதியின் கடைசி 10 அல்லது 12 மீட்டர் நீளமுள்ள இடிபாடுகளின் வழியாக கிடைமட்டமாக கைமுறையாக துளையிட்டு ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள 80 செ.மீ விட்டம் கொண்ட குழாய் வழியாக ஒவ்வொருவராக சென்று, அங்கு குவிந்துள்ள மண் மற்றும் இடிபாடுகளை அகற்றுவர். சுரங்கத் தொழிலில் இவர்கள் எலிவளை நிபுணர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
முன்னதாக மீட்புக்குழுவினர் குழாய் பதிக்க ஆகர் இயந்திரத்தைப் பயன்படுத்தி சுமார் 47 மீட்டர் துளையிடும் பணியை முடித்தனர். ஆகர் இயந்திரம் இடிபாடுகளுக்குள் சிக்கியதால், துளையிடும் பணி கிடப்பில் போடப்பட்டு, பிளாஸ்மா கட்டர் மூலம் வெட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து, பக்கவாட்டில் துளையிடும் முயற்சி கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக, சுரங்கத்தின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிட்டு, தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டது. செங்குத்தாக துளையிடும் பணி தற்போது நடைபெற்றது.
சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக உத்தர்காசியில் 41 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
இன்னும் 2 மீட்டர் தான்: இந்நிலையில், சற்று முன்பு செய்தியாளர்களிடம் பேசியுள்ள எலி வளை துளையிடும் நிபுணர் கிறிஸ் கூப்பர், "துளையிடும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 மீட்டர் தூரம் மட்டுமே உள்ளது. இந்த பணி எந்த தடையும் இன்றி எளிதாகச் சென்று கொண்டிருக்கிறது. சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அடுத்த 3 மணி நேரத்தில் வெளியேற்றப்படுவார்கள். 5 மணியளவில் ரிசல்ட்டை பார்க்க போகிறோம்." எனத் தெரிவித்தார்.
துளையிடும் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து, சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் உறவினர்களும் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சுரங்கத்திற்குள்ளேயே அவசர மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கின்றனர். ஒவ்வொருவரும் வெளியே கொண்டு வரப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு மேல் ஆகி வருகிறது.
உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்ட பின், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ராணுவ ஹெலிகாப்டர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சுரங்கப் பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்காக 400 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் மீட்புப் பணி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications