ஆம் ஆத்மி கட்சியின் தூணே இடிந்தது: ஆதரவை வாபஸ் பெற்ற மிடில் கிளாஸ்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு இத்தனை நாட்கள் ஆதரவு அளித்து வந்த நடுத்தரவர்க்க மக்கள் தற்போது பின்வாங்கியுள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு நடுத்தர வர்க்க மக்கள் தான் அமோக ஆதரவு அளித்தனர். இந்நிலையில் அவர்கள் அந்த கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை நிறுத்தியுள்ளனர். இதனால் ஆம் ஆத்மி கட்சி தற்போது பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவை நாடியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி துவங்கப்பட்டபோது அது சாதாரண மக்களுக்காக பாடுபடும் என்று நடுத்தர வர்க்க மக்கள் நம்பினர். அதனால் அந்த கட்சிக்கு அமோக ஆதரவு அளித்தனர். ஆனால் ஆம் ஆத்மி கட்சியோ டெல்லியில் ஆட்சி அமைத்த வேகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து அவருக்கு ஆதரவு அளித்தவர்களின் தலையில் இடியை இறக்கினார். இவரையா நம்பினோம் என்று அவரது ஆதரவாளர்கள் நினைக்கும் வகையில் நடந்து கொண்டார்.

கடந்த சில மாதங்களாக ஆம் ஆத்மி கட்சியின் நடவடிக்கைகளை பார்த்து வரும் நடுத்தர வர்க்க மக்கள் அதன் மீது வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டனர். தற்போது அந்த கட்சியை பிற்படுத்தப்பட்ட மக்கள் நம்புகிறார்கள்.
டெல்லியில் உள்ள சுல்தான்பூரில் மறுதேர்தல் வைத்தால் கடந்த முறை போன்று இல்லாமல் இந்த முறை நிச்சயம் வெற்றி பெறலாம் என்று கட்சி நினைக்கிறது. ஆனால் மறுதேர்தலை நினைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் பீதியில் உள்ளனர். கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் சிலர் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். பலர் எப்போது வெளியேறுவார்கள் என்று தெரியவில்லை. கட்சி நிலைமை இப்படி இருக்கையில் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க துடிக்கிறார் கெஜ்ரிவால்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications