ஆபத்தை எதிர்கொள்ள தயாராக இருங்கள்... விமானப்படை விழாவில் பிரணாப் பேச்சு
பெங்களூரு: ஆபத்துக்கள் சூழ்ந்துள்ள நிலையில் தனது பலத்தை நிரூபிக்க இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று விமானப்படை அதிகாரிகள் மத்தியில் பேசிய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
தெஸ்பூர் விமான படை மையத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இந்திய விமானப்படையின் 115 ஹெலிகாப்டர் யூனிட் மற்றும் 26 ஸ்கோட்ரான் படைப்பிரிவுகளுக்கு உயரிய 'குடியரசு தலைவர்' விருது வழங்கி கவுரவித்தார்.

அந்த விழாவில் முகர்ஜி பேசுகையில், "அனைத்து துறைகளிலும் இந்தியா தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது. அதேபோல பாதுகாப்பு துறையும் வளர்ச்சியடைய வேண்டியது அவசியம். அனைத்து தரப்புக்கும் சம நியாயம் என்று நம்பும் நாடு இந்தியா. அந்த சமத்துவத்தை பாதுகாப்பு படைகள் ஏற்படுத்தி கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கன்னியாகுமரி முதல் இமயம் வரையில் விமானப்படை வீரர்கள் தேசத்தை பெருமைப்பட செய்துள்ளனர். பல்வேறு சர்வதேச பயிற்சிகளின்போது இந்திய விமானப்படையினரின் சாகசங்களை பார்த்து பல நாட்டவர்களும் வியப்பு தெரிவித்துள்ளனர். 115 ஹெலிகாப்டர் யூனிட் 1967ல் சண்டீகரில் துவங்கப்பட்டது. எம்ஐ-4 ஹெலிகாப்டர் அதன் முதல் படைப்பாக இருந்தது. 1971ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின்போது, சண்டீகர் யூனிட் நமது ராணுவத்திற்கு பலதரப்பட்ட உதவிகளை செய்தது. மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

26 ஸ்கோட்ரான் (போர்வீரர் படை) 1968ல் உருவாக்கப்பட்டது. இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தில் இந்த படை பிரிவு முக்கிய பங்காற்றியது. 1999ம் ஆண்டு கார்கில் யுத்தத்தின்போதும் இப்படைப் பிரிவு இந்திய வெற்றியில் முக்கிய பங்காற்றியது. இவ்வாறு பிரணாப் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications