என் குடும்பத்தினர் மீது ஏன் அவதூறு.. மகளின் படத்தை மார்பிங் செய்ததால் அமைச்சர் ரோஜா வேதனை
நகரி: தனது மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிடுகின்றனர் என நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான நடிகை ரோஜா வேதனையாக தெரிவித்துள்ளார். மேலும் பிரபலமாக இருந்தாலே பிரச்சினைகள் வருவது சகஜம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ரோஜா. இவர் ஆர் கே செல்வமணி இயக்கிய செம்பருத்தி திரைப்படத்தில் முதல் முறையாக அறிமுகமானார்.
இதையடுத்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தன்னை அறிமுகம் செய்த இயக்குநர் ஆர்.கே. செல்வமணியையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மகள், மகன்
இவர்களுக்கு அன்சுமாலிகா என்ற மகளும் மகனும் உள்ளனர். இவருடைய திருமணத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருகை தந்திருந்தார். இதற்காக திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற செல்வமணியிடம், நடிகை ரோஜா எனது மகள் போன்றவர், அவரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என கூறியிருந்தார்.

நடிகை ரோஜா
திருமணமானதும் நடிகை ரோஜா படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதன் பிறகு அரசியலில் இறங்கினார். அதாவது ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். பின்னர் அங்கு நகரி தொகுதியில் அவருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார். இதற்கு காரணம் தனது கட்சியினரே என குற்றம்சாட்டியிருந்தார்.

ஓரங்கட்டப்பட்ட நிலை
கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் மிகவும் மனவேதனைப்பட்ட நடிகை ரோஜா, துவண்டு போகாமல் துணிந்து நின்று ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து நகரி தொகுதியின் எம்எல்ஏவானார். அப்போது ஆந்திர அமைச்சரவையில் எதிர்க்கட்சியில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் இருந்தது. அதில் எம்எல்ஏ ரோஜா தெலுங்கு தேசம் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

சட்டசபை தேர்தல்
இதையடுத்து அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதற்காக நடிகை ரோஜா தீவிர பிரச்சாரம் செய்ததை யாராலும் மறுக்க முடியாது. இதனால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிட்டதட்ட 3 ஆண்டுகள் கழித்து நடிகை ரோஜா ஆந்திர அமைச்சரவையில் இணைக்கப்பட்டார். அவருக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. நடிகை ரோஜா நகரி தொகுதி மக்களுக்கு நன்மை செய்வதற்காக பல மெட்ரோபாலிட்டன்கள் இருக்கும் போதிலும் நகரி தொகுதியிலேயே வீட்டை கட்டி அங்கேயே வசித்து வருகிறார்.

தமிழக ஆந்திர எல்லை
பொதுமக்களின் குறைகளை அவ்வப்போது கேட்டறிகிறார். தமிழக ஆந்திர எல்லையில் உள்ள பள்ளிகளுக்கு தமிழ் பாடபுத்தகம் வேண்டும் என எம்எல்ஏவாக இருக்கும் போதே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்து பாடபுத்தகங்களையும் பெற்றார். இந்த நிலையில் தனது மகள் அன்சுமாலிகா, தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோஜாவின் மகளின் புகைப்படத்தை யாரோ மர்ம நபர்கள் மார்பிங் செய்து மிகவும் மோசமான நிலையில் வெளியிட்டிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஜா தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

மகளின் புகைப்படம்
அதில் தனது மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்து மர்ம நபர்கள் வெளியிட்டுள்ளனர். நான் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் என் குடும்பத்தினர் மீது தொடர்ந்து அவதூறுகள் பரப்புவது வருத்தம் அளிக்கிறது. இதனால் என் மகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இது போன்ற விஷயங்கள் பிரபலங்களுக்கு நடப்பது சகஜமே என கூறியுள்ளார்.
-
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!











Click it and Unblock the Notifications