அழுது புலம்பிய பின்... பத்மபூஷன் விருதுக்கு சாய்னா பெயரைப் பரிந்துரைக்கும் விளையாட்டு அமைச்சகம்!
டெல்லி: பத்ம பூஷன் விருதுக்கு பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை பரிந்துரை செய்ய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பத்மபூஷன் விருதுக்கு சாய்னாவைப் பரிந்துரை செய்யும் கடிதம் கிடைத்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு பத்ம பூஷன் விருது வழங்க வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு, இந்திய பேட்மிண்டன் சங்கம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்தது.

ஆனால் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு சிறப்பு அந்தஸ்தின் அடிப்படையில், அந்த விருதினை வழங்க விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இதனால், சாய்னா நேவால் கடும் அதிருப்தி அடைந்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ஒருவர் இரண்டாவது முறையாக பத்ம விருது பெற வேண்டுமானால் 5 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிலையில் 2011ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வென்ற சுஷில் குமாரின் பெயர் எதன் அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' என ஊடகங்கள் வாயிலாக கேள்வி எழுப்பினார்.
மேலும், 2010ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வென்ற சாய்னா, பத்ம பூஷன் விருதுக்காக கடந்த ஆண்டு விண்ணப்பித்தபோது, 5 ஆண்டுகள் நிறைவடையவில்லை என்ற காரணத்தைக்கூறி, அடுத்த ஆண்டு விண்ணப்பிக்கும்படி விளையாட்டு அமைச்சகம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பத்ம பூஷன் விருதுக்கு சாய்னா நேவாலை பரிந்துரைக்கும் கடிதம் சனிக்கிழமைதான் கிடைத்ததாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் விளக்கமளித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பத்ம பூஷண் விருதுக்கு சாய்னா நேவால் பெயரை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சம் பரிந்துரைக்கவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், சாய்னா நேவாலுக்கு விருது வழங்குமாறு, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய பேட்மிண்டன் சங்கம் அனுப்பியிருந்த பரிந்துரைக் கடிதம் ஜனவரி 3ம் தேதிதான் கிடைத்தது. எனவே, விருதுக்கு சாய்னா நேவாலின் பெயரை உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்' என அவர் தெரிவித்தார்.
மேலும், சாய்னா நேவால் இந்திய விளையாட்டுத்துறைக்கு பெருமை சேர்த்தவர். மேலும் பல வெற்றிகளை அவர் ஈட்ட வேண்டும் என்றும் சர்பானந்தா சோனோவால் கூறினார்.
இவற்றைத் தொடர்ந்து இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், சாய்னாவின் பெயரை பத்ம பூஷனுக்கு பரிந்துரை செய்ய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஆனால் விருதுகள் தானாக வர வேண்டும். கெஞ்சி வாங்கக் கூடாது என்று சாய்னாவின் வைரியான ஜூவாலா கட்டா டிவிட்டரில் கிண்டலடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications