டெல்லியில் கொடூரம்: 8 வயது தங்கையை பலாத்காரம் செய்த சிறுவன்
டெல்லி: டெல்லியில் 8 வயது சிறுமியை மைனரான அவரின் அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
டெல்லியில் கூலி வேலை செய்யும் தம்பதிக்கு 8 வயது மகள் மற்றும் மைனர் மகன் உள்ளனர். பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் அந்த சிறுவன் தனது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களின் மகள் ரத்தப்போக்குடன் அவதிப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பிறப்பு உறுப்பில் இருந்து அதிக ரத்தப் போக்குடன் 8 வயது சிறுமி வந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபரங்களை தெரிந்து கொண்டு சிறுவனை கைது செய்தனர்.
பெற்றோர் இல்லாத நேரத்தில் அண்ணன் தன்னை இப்படி செய்துவிட்டதாக சிறுமி கூறியுள்ளார். டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி சிறுமியை நேரில் சந்தித்தார்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள சிறுமியின் நிலை மோசமாக இருப்பதாக ஸ்வாதி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் சிறுமியின் மருத்துவ செலவை பெண்கள் ஆணையம் ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications