உ.பி.யில் +2 மாணவியை காரில் கடத்தி, ஒரு வாரமாக பலாத்காரம் செய்த 6 பேருக்கு வலை
லக்னௌ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளி மாணவியை காரில் கடத்தி சென்று, ஒரு வாரமாக அடைத்து வைத்து 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சண்டவுலி என்ற மாவட்டத்தில் ப்ளஸ் 2 படித்து வரும் மாணவி ஒருவர் கடந்த 9 ஆம் தேதி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் திடீரென மாணவியின்அருகே நின்றது. இதில் இருந்த சிலர் காருக்குள் மாணவியை இழுத்துப்போட்டு கொண்டு வேகமாக தப்பினர்.
அலகாபாத் நகரில் ஒரு ஆள் அரவமற்ற பகுதயில் உள்ள ஒரு வீட்டில் அந்த பெண்ணை அடைத்து வைத்த 6 பேர் கொண்ட கும்பல் கடந்த ஒருவரமாக மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளது.
இந்நிலையில் மயங்கி கிடந்த மாணவியை அதே காரில் கொண்டு சென்ற அந்த மர்ம கும்பல், வாரணாசி நகரில் உள்ள ரெயில் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு கீழே தள்ளிவிட்டது.
ந்த கும்பலைச் சேர்ந்த ஒருவன் மாணவியின் பெற்றோருக்கு போன் செய்து, உங்கள் மகள் கண்ட் ரெயில் நிலையத்தின் அருகே மயங்கி விழுந்துக் கிடப்பதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர். அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.
மயங்கி கிடந்த மகளின் நிலையை கண்டு கதறிய பெற்றோர். பெண்ணை மயக்கம் தெளியவைத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் பலாத்கார செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் 6 பேரையும் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications