சந்தைக்கு காய் வாங்கப் போன சிறுமி... கத்தி முனையில் 3 கயவர்கள் செய்த காரியம்
சந்தைக்குக் காய் வாங்கப்போன சிறுமியை கடத்திக்கொண்டு போய் கத்தி முனையில் மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அம்பாலா: பெண் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பவே பயமாக இருக்கிறது. மலராத மொட்டுக்களைக் கூட கசக்கி முகர்ந்து நசுக்கி விடுகின்றனர். நாட்டில் ஒரு நிமிடத்திற்கு 4 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு மணி நேரத்தில் 39 பாலியல் வழக்குகள் பதிவாகின்றன. அம்பாலாவில் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த கடைக்குப் போய் சாமான் வாங்கிக்கொண்டு வருவதற்குள் கயவர்கள் சிலர் அந்த சிறுமியை கடத்திக்கொண்டு போய் கத்திமுனையில் பலாத்காரம் செய்துள்ளனர்.
அம்பாலாவைச் சேர்ந்த 13 வயதான அந்த சிறுமி கடந்த 15ஆம் தேதி வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க அருகில் இருந்த சந்தைக்குச் சென்றார். இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. வீட்டில் இருந்த பதறிப்போய் தேடிப்பார்த்தனர். மறுநாள் மாலையில்தான் சிறுமி கசங்கிய நார் போல வீடு திரும்பினார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை அழுது கொண்டே கூறினார்.

சந்தைக்குப் போன தன்னை பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் பைக்கில் அழைத்துச்சென்றதாகவும், ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச்சென்று கட்டிப்போட்டு கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்ததாகவும் கூறினார். ஏற்கனவே அங்கிருந்த இரண்டு பேரும் கத்தி முனையில் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். மூவரும் மாறி மாறி தன்னை சீரழித்ததாகவும் மது போதையில் அவர்கள் மயக்கமான போது தான் தப்பி வந்து விட்டதாகவும் கூறி அழுதார்.
பெற்றோர் அளித்த புகாரின் பேரின் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மூன்று குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்தியாவில் ஆண்டு தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2,78,886 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தண்டனை பெற்றவர்கள் 30 சதவிகிதம் பேர்தான். 70 சதவிகிதம் பேர் தண்டனை பெறாமல் தப்பித்து வருகின்றனர்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications