For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

30 ஆண்டுகளில் இல்லாத கடும் உறைபனி... மொத்தமாக உறைந்து இருக்கும் ஸ்ரீநகர்!

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மைனஸ் 8.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

கடும் குளிரால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் நீர்நிலைகள் உறைந்துபோய் உள்ளன. குடிநீர் விநியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

Minus 8.8 Degrees Celsius records in Srinagar

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் உறைபனி நிலவி வருகிறது. ஸ்ரீநகரில் வெப்பநிலை நேற்று இரவு மைனஸ் 8.8 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்து. கடந்த 30 ஆண்டுகளில் மிகக் குறைந்த வெப்பநிலையை ஸ்ரீநகர் பதிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு மைனஸ் 7.2 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்திருந்தது. ஜனவரி 13'ஆம் தேதி நகரத்தில் மைனஸ் 8.4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது.

வாங்க விவசாயிகள் பலத்தை காட்டுவோம்...அழைப்பு விடுக்கும் பஞ்சாப் முதல்வர்வாங்க விவசாயிகள் பலத்தை காட்டுவோம்...அழைப்பு விடுக்கும் பஞ்சாப் முதல்வர்

காஷ்மீர் பிராந்தியத்தின் நுழைவாயில் நகரமான காசிகுண்ட், மைனஸ் 10.2 டிகிரி செல்சியஸின் குறைந்தபட்ச வெப்பநிலையை பதிவு செய்தது. வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க்கின் ஸ்கை ரிசார்ட்டில் குறைந்தபட்ச வெப்பநிலைமுந்தைய இரவின் மைனஸ் 10.0 டிகிரி செல்சியஸிலிருந்து மைனஸ் எட்டு டிகிரி செல்சியஸாக குறைந்தது.

Minus 8.8 Degrees Celsius records in Srinagar

தெற்கு காஷ்மீரில் ஆண்டுதோறும் அமர்நாத் யாத்திரையின் அடிப்படை முகாமாகவும் விளங்கும் பஹல்காம் சுற்றுலா ரிசார்ட், மைனஸ் 12 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்தது. குப்வாரா மைனஸ் 4.7 டிகிரி செல்சியஸையும், தெற்கில் கோக்கர்நாக் குறைந்தபட்ச வெப்பநிலை 13.1 டிகிரி செல்சியஸையும் பதிவு செய்தது.கடுமையான

இந்த கடும் குளிரால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் நீர்நிலைகள் உறைந்துபோய் உள்ளன. இதனால் குடிநீர் விநியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. மொத்த நகரமே உறைந்து உள்ளன. சில்லாய்-கலன் எனும் குளிர்காலம் அதிகாரப்பூர்வமாக இன்று முடிவடைந்தது. ஆனால் காஷ்மீரில் குறைந்தபட்ச வெப்பநிலை அடுத்த இரண்டு நாட்களுக்கு உறைபனிக்கு கீழே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Srinagar recorded a low of minus 8.8 degrees Celsius, the highest in the last 30 years
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X