நொய்டாவில் மாயமான பெண் ஃபேஷன் டிசைனர் 4 நாட்கள் கழித்து கண்டுபிடிப்பு
குர்காவ்ன்: நொய்டாவில் திங்கட்கிழமை காணாமல் போன ஃபேஷன் டிசைனர் ஷிப்ரா 4 நாட்கள் கழித்து குர்காவ்னில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நொய்டாவை சேர்ந்த ஃபேஷன் டிசைனர் ஷிப்ரா மாலிக்(29). அவர் கடந்த திங்கட்கிழமை மதியம் 1 மணி அளவில் தனது வீட்டில் இருந்து மாருதி ஸ்விப்ட் காரில் டெல்லியில் உள்ள சாந்தினி சவுக்கிற்கு கிளம்பினார்.
அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது கார் மட்டும் வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்தது. டிரைவரின் இருக்கைக்கு அடியில் காரின் சாவி இருந்தது. இதையடுத்து ஷிப்ராவை காணவில்லை என்று அவரது கணவர் போலீசில் புகார் அளித்தார்.

அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகும் முன்பு அவர் இரண்டு பேருக்கு போன் செய்து பேசியுள்ளார். அவர் கடைசியாக லஜ்பத் நகரில் இருந்து 100 எண்ணுக்கு போன் செய்துள்ளார். இந்நிலையில் 4 நாட்கள் கழித்து ஷிப்ரா குர்காவ்னில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குர்காவ்ன் போலீசார் அவரை நொய்டா போலீசாரிடம் ஒப்படைத்தனர். தன்னை மூன்று பேர் குர்காவ்னுக்கு கடத்திச் சென்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
கடன் மற்றும் சொத்து பிரச்சனையால் ஷிப்ராவே இந்த கடத்தல் நாடகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. உண்மையில் நடந்தது என்னவென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications