மிசோரமில் ஆட்சியை பிடித்த ZMP கட்சி! முதல்வர் ஜோரம்தங்கா தோல்வி.. பாஜகவை விட மோசமான காங்கிரஸ்
ஐஸ்வால்: மிசோம் மாநில சட்டபை தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதில் முதல்வர் ஜோரம்தங்கா தோல்வியடைந்தார். அதோடு அவரது கட்சி பெரிய பின்னடைவை சந்தித்த நிலையில் எதிர்க்கட்சியான இசட்எம்பி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. அதோடு காங்கிரஸ், பாஜக கட்சிகள் மோசமான தோல்வியை சந்தித்துள்ளன.
கடந்த நவம்பர் மாதம் மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் மிசோரம் தவிர பிற 4 மாநிலங்களுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்தது.

இதில் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக அரியணை ஏறியுள்ளது. அதேபோல் தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர்ராவின் பிஆர்எஸ் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் தான் மிசோரம் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த மாதம் 7ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இங்கு மொத்தம் 80.66 சதவீத ஓட்டுகள் பதிவானது. மிசோரமை பொறுத்தமட்டில் கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்நிலையில் தான் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதால் ஓட்டு எண்ணும் தேதியை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று அங்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் 13 மையங்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது.
மிசோரமை பொறுத்தமட்டில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. மிசோரமில் தற்போது மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) கட்சியின் ஆட்சி நடக்கிறது. அதன் தலைவர் ஜோரம்தங்கா முதல்வராக இருந்தார். இந்நிலையில் தான் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்), ஜோரம் மக்கள் முன்னணி (இசட்பிஎம்), காங்கிரஸ், பாஜக இடையே போட்டி என்பது இருக்கிறது.
இந்நிலையில் தான் எம்என்பி கட்சியின் தலைவரும், மிசோரம் முதல்வருமான ஜோரம்தங்க ஐஸ்வால் கிழக்கு I தொகுதியில் தோல்வியடைந்தார். இவர் 2,101 ஓட்டுகள் வித்தியாசத்தில் இசட்பிஎம் கட்சியின் வேட்பாளர் லால்தன்சங்காவிடம் தோற்றுப்போய் உள்ளார். மாறாக அவரது எம்என்பி கட்சி 10 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்துள்ளது.
அதேவேளையில் மிசோரமில் எதிர்க்கட்சியாக இருந்த இசட்பிஎம் கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தி உள்ளது. கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்த இசட்எம்பி கட்சி இந்த முறை ஆளும்கட்சியாகி உள்ளது. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த கட்சி 27 தொகுதிகளில் வென்று அசத்தி அரியணை ஏறுவதை உறுதி செய்துள்ளது.
இந்த தேர்தலில் பாஜக 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சாய்கா தொகுதியில் பாஜக வேட்பாளர் டாக்டர் பெய்சுவா வெற்றி பெற்றார். பாலக் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராமோ வெற்றி பெற்றார். காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மிசோரமில் மீண்டும் மாநில கட்சியே ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சியை மக்கள் அங்கீகரிக்க மறுத்துள்ளனர்.
இந்த தேர்தல் மூலம் முதல்வர் ஜோரம்தங்காவின் எம்என்பி கட்சியிடம் இருந்து ஆட்சியை பறித்து மிசோரமில் செயல்படும் மாநில கட்சியான இசட்பிஎம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications