மிசோரமில் கிடுகிடுவென அதிகரித்த கொரோனா பாதிப்பு- மத்திய குழு ஆய்வு- மியான்மர் அகதிகள் காரணமா?
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனையடுத்து மத்திய அரசின் அதிகாரிகள் குழு மிசோரமில் ஆய்வு மேற்கொண்டது.
மிசோரம் மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மிசோரமில் செவ்வாய்க்கிழமையன்று 1,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
மிசோரமில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 99,856. மேலும் மொத்தம் 331 பேர் கொரோனாவால் மிசோரமில் உயிரிழந்துள்ளனர். மிசோரம் முதல்வர் ஜோரம் தங்காவின் மூத்த சகோதரி அண்மையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

மிசோரம் 3-வது இடம்
நாட்டில் கேரளாவில்தான் அதிகமான ஒருநாள் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. கேரளாவில் 9,735 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. மகாராஷ்டிராவில் 2,401 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 3-வதாக மிசோரமில்தான் 1,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதற்கு அடுத்து 4-வதாக தமிழகத்தில் நேற்று 1,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

மத்திய குழு ஆய்வு
மிசோரமில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் மத்திய அரசு அதிகாரிகள் குழு நேற்று அம்மாநிலத்துக்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்தது. மேலும் மாநில அரசின் குழுவும் தற்போதைய கொரோனா கால கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளில் மாற்றம் செய்வது உள்ளிட்ட பரிந்துரைகளை மாநில அரசுக்கு வழங்கி உள்ளது. மிசோரமில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு வீச்சில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மருத்துவ வசதி விரிவாக்கம்
மிசோரம் மாநிலத்தில் தற்போதைய நிலையில் 341 படுக்கைகளுடன் கூடிய ஜோரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இம்மருத்துவமனையில் 34 ஐசியூ படுக்கைகள் உள்ளன. இது தவிர 18 கொரோனா தடுப்பு சுகாதார மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகையால் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டு தொடங்கி அதற்கென 10 ஐசியூ படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அகதிகள் காரணமா?
இதனிடையே மிசோரம்-மியான்மர் எல்லை பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியான்மரில் இருந்து ராணுவத்துக்கு அஞ்சி அகதிகளாக வந்தவர்களே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலமே மிசோரமில் கொரோனா அதிகளவு பரவி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications