வாக்கு எண்ணிக்கை தேதியை மாத்துங்க! மிசோரமில் எழுந்த வாய்ஸ்! டெல்லிக்கு புறப்பட்ட டீம்! என்ன மேட்டர்

Subscribe to Oneindia Tamil

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அங்கே வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இப்போது தேர்தல் நடைபெறுகிறது. அதில் மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது.

Mizoram NGO body Seeking change in counting day

ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் டிச. 3ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.

மிசோரம்: இதற்கிடையே மிசோரம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மிசோரம் மாநிலத்தில் உள்ள என்ஜிஓ குழு தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்திக்க டெல்லிக்குச் சென்றுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. மிசோரம் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், அங்குள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றுமாறு தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தின. இருப்பினும், தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றத் தயாராக இல்லை.

விளக்கம்: தேர்தல் நாளில் தான் பொதுமக்கள் ஈடுபாடு இருக்கும் வாக்குப்பதிவு நாளில் ஊழியர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள் என்பதால் டிச.3ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இந்தச் சூழலில் தான் அங்குள்ள என்ஜிஓசிசி என்ற அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது, இருப்பினும், அவர்களுக்குத் தேர்தல் ஆணையத்தில் இருந்து எந்தவொரு அதிகாரியும் அப்பாயின்ட்மென்ட் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "தேர்தல் கமிஷனிடம் இருந்து எங்களுக்கு எந்தவொரு அப்பாயின்மென்ட்டும் இல்லை என்றாலும் கூட நாங்கள் டெல்லியில் அதிகாரிகளை நேரடியாகச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். எங்களுக்குச் சாதகமான முடிவு கிடைக்கும் என் நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே கடந்த நவ. 7ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் 80% வாக்குகள் பதிவானது. அங்கே மிசோரம் முன்னணி மற்றும் காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+