தமிழக சட்டசபை நிகழ்வுகள் எதிர்பாராதவை… கபில்சிபல் கவலை
தமிழக சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகள் எதிர்பாராதவை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார். அப்போது ரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
கடந்த 16ம் தேதி சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, அவர் எடப்பாடி பழனிச்சாமியின் பலத்தை நிரூபிக்க இன்று சிறப்பு சட்டசபைக் கூட்டப்பட்டது. இன்று காலை கூடிய சட்டசபையில் திமுக, காங்கிரஸ், ஓபிஎஸ் அணியினர் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பின்னர், அவையில் மைக் மற்றும் நாற்காலிகள் உடைப்பு சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. இதனையடுத்து, சபாநாயகர் அவையை ஒத்தி வைத்தார்.
சட்டசபையில் நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல், எதிர்பாராத நிகழ்வு என்ற கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சட்டசபையில் சபாநாயகர் தனபால் எடுக்கும் முடிவை அனைத்து எம்எல்ஏக்களும் ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications