பணம் கேட்டால் டோல்கேட்டுகளை நொறுக்குங்கள்- ராஜ் தாக்கரே 'உத்தரவு'! நிறைவேற்றிய தொண்டர்கள்!!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே, நாக்பூர், வஷி ஆகிய இடங்களில் சுங்கசாவடிகளை மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சுங்க சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே, நம் கட்சியினர் சுங்க சாவடிகளில் எந்த ஒரு கட்டணத்தையும் நாம் செலுத்தக் கூடாது. அப்படி செலுத்துமாறு யார் கேட்டாலும் போராடுங்கள்.. சண்டை போடுங்கள் என்று கூறியிருந்தார்.
இந்த பேச்சை தொடர்ந்து நாக்பூர், தானே, அய்ரோலி, வஷி ஆகிய இடங்களில் சுங்க சாவடிகளை அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கின்றனர் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications