”மொபைல்க்கு நோ, மெஜேஸ்க்கு எஸ்”-தேர்தல் ஆணையம் புதிய “ரூல்”
டெல்லி: நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில் அசம்பாவிதங்களை தடுக்க வாக்குச்சாவடிகளில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
ஆனால், வாக்குசாவடிகளில் உள்ள தேர்தல் அதிகாரி மட்டும் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க பயன்படுத்தலாம் என்று தேர்தல் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், தேர்தல் கால பதற்றங்கள், கலவரங்கள் கட்டுப்படுத்தப் படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

செல்போனுக்கு தடை:
நாடாளுமன்ற தேர்தல் 2014 க்கான தேர்தல் விதிமுறையில், வாக்குச்சாவடிகளில் செல்போன் பயன்படுத்துவது தடை விதிக்கப்பட்டு உள்ளது.
எஸ்எம்எஸ் மட்டும் ஓகே:
ஆனால், வாக்குச்சாவடிகளில் உள்ள தேர்தல் பொறுப்பு அதிகாரி அல்லது முதன்மை அதிகாரி மட்டும் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் அங்கு நடக்கும் நடவடிக்கைகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
வீடியோ பதிவு ஏற்பாடு:
மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஏற்கனவே மிக அதிக பதற்றமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
வாக்கு சாவடிகள் கண்காணிப்பு:
இருந்தாலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திடீரென ஏற்படும் சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்களை பதிவு செய்ய வீடியோ பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் சுதந்திரம் பாதிக்காது:
வாக்குச்சாவடிகளில் இதுபோன்ற வீடியோ பதிவு செய்யும்போது, வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை பதிவு செய்ய அனுமதி இல்லை. பத்திரிக்கை நிருபர்கள், அனுமதி இல்லாத வீடியோ பதிவாளர்கள், புகைப்பட கலைஞர்கள் உள்ளிட்டோர் வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதி கிடையாது.
வெளியில் போட்டோ எடுக்கலாம்:
ஆனால், வாக்குச்சாவடிகளுக்கு வெளியே இருந்து வாக்காளர்களை போட்டோ மற்றும் வீடியோ பதிவு செய்ய செய்தியாளர்களுக்கு அனுமதி உண்டு.எதற்காகவும் அவர்கள் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை.
அனுமதிச்சீட்டு:
மாநில அரசின் முக்கிய அதிகாரிகள் கூட தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதி சீட்டு எடுத்து வந்தால் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications