இலங்கை செல்கிறார் மோடி - ராஜபக்சே அழைப்பை ஏற்றார்!
டெல்லி: இலங்கைக்கு வருமாறு சிங்களத்து ராஜபக்சே விடுத்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டுள்ளாராம். விரைவில் அவர் இலங்கை செல்லவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாலர் சுஜாதா சிங் கூறியுள்ளார்.
இன்று ராஜபக்சே உள்ளிட் சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் சுஜாதா சிங் பேசுகையில்,

சார்க் தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்தை பயனுள்ளதாக இருந்தது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடனான பேச்சுவார்த்தையில் தீவிரவாதம் குறித்து விவாதிக்கப்பட்டது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கக்கூடாது என நவாஸிடம் மோடி வலியுறுத்தினார். இந்தியாவுடனான உறவுவையும், வர்த்தக தொடர்பையும் வலுப்படுத்த நவாஸ் உறுதி கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவுடனான பேச்சுவார்த்தையின் போது தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. 13-வது அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தினார். அதிகார பகிர்வுக்கு 13-வது அரசியல் சட்டம் அமலாவது அவசியம் என்றும் விளக்கிக் கூறினார்.
அனைத்து துறைகளிலும் இலங்கையுடன் ஒத்துழைப்பு தொடரும் என உறுதி கூறினார். இதையடுத்து இலங்கைக்கு வரவேண்டும் என்று ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்று மோடி இலங்கைக்கு வருவதாக சம்மதம் தெரிவித்துள்ளார் என்றார் சிங்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications