என்னை இழிவுப்படுத்துவதற்காக ஒரு சமுதாயத்தையே திருடர்கள் என்பதா- ராகுல் காந்திக்கு மோடி கண்டனம்
ராய்ப்பூர்: என்னை இழிவுப்படுத்துவதற்காக ஒரு சமுதாயத்தையே திருடர்கள் என்பதா என ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று முன் தினம் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ஏன் எல்லா திருடர்களும் மோடி என பெயர் வைத்துள்ளனர் என கேள்வி எழுப்பினார்.
மோடி என்பது ரெட்டி, ராவ் ஆகிய பெயர்களை போல் ஒரு சமுதாயத்தின் பெயராகும். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது.

பரம்பரை
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பாடபாராவில் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார். அவர் அப்போது கூறுகையில் ஒடுக்கப்பட்டவர்களை விமர்சிப்பதும், அவர்களை அடிமை போல் நடத்துவதும் பரம்பரை குடும்பத்தின் சுல்தான் மனநிலை.

இரவில் தூக்கம்
நாடு முழுவதும் பாஜக அலை வீசுவதால் காங்கிரஸும் கூட்டணி கட்சிகளும் விரக்தியில் உள்ளனர். அவர்களுக்கு இரவில் தூக்கம் வரவில்லை. அதனால்தான் இப்படி பேசுகின்றனர்.

திருடர்
இதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் தினந்தோறும் எல்லை மீறி பேசி வருகிறார்கள். அவர்களை பொருத்தவரை மோடி என பெயரில் யார் இருந்தாலும் திருடர், என்ன அரசியல் இது?

குடும்பம்
என்னை இழிவுப்படுத்துவதற்காக ஒரு சமுதாயத்தையே திருடர்கள் என முத்திரை குத்துகிறார்கள். இங்கே சாஹு என அழைக்கப்படும் சமூகம் தான் குஜராத்தில் மோடி என அழைக்கப்படுகிறது. தரக்குறைவாக பேசுவது பரம்பரை குடும்பத்தின் இயல்பாகி விட்டது. மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் திருடர்களா?

ஜாமீன்
நேர்மையாக வரி செலுத்துபவர்களை சுயநலவாதிகள் என்று காங்கிரஸ் சொல்கிறது. பரம்பரை குடும்பம்தான், கோடிக்கணக்கான ரூபாய் வருமானவரி மோசடியில் ஈடுபட்டுள்ளது. தற்போது, ஜாமீனில் உள்ளது என்றார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications