மோடியால் மத்தியில் நிலையான ஆட்சி தர முடியும்: கிரண் பேடி திடீர் கருத்து!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியால் மத்தியில் நிலையான ஆட்சியை தர முடியும் என்று முன்னாள் காவல்துறை அதிகாரியும், அன்னா ஹசாரேவின் ஆதரவாளருமான கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். நரேந்திர மோடியை முன்னிறுத்தியே பா.ஜ.க தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. நரேந்திர மோடியின் அலையே நடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க.விற்கு பெரும்பாண்மையை தேடித் தந்ததாக அக்கட்சியினர் உறுதியாக நம்புகின்றனர்.

Modi can give stable govt: Kiran Bedi

இந்த சூழ்நிலையில் அன்னா ஹசாரேவின் முக்கிய உதவியாளரான கிரண் பேடி தனது வலைதளத்தில் , ' என்னை பொறுத்தவரை முதலில் இந்தியாவில் ஒரு நிலையான ஆட்சி வேண்டும். நரேந்திர மோடியால், நிலையான, திறமையான, பொறுப்பான, அனுபவ ரீதியிலான ஒரு பொதுவான அரசை கொடுக்கமுடியும். எனவே எனது வாக்கு நரேந்திர மோடிக்கே. லஞ்சம் இல்லா அரசை வேண்டுபவர்கள் நிச்சயம் காங்கிரசை மீண்டும் ஆதரிக்கமாட்டார்கள்' என்று கூறியுள்ளார்.

கிரண் பேடி தொடர்ந்து நரேந்திர மோடிக்கு ஆதரவாக கருத்துக்களைன தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+