For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி பிரச்சார மேடையில் ராமர் படம்: விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பைசாபாத்: மோடி பிரச்சாரம் செய்த மேடையின் பின்னணியில் ராமர் படம் இருந்தது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, ராமர் பெயரை தனது உரையின்போது உச்சரித்தார். ஸ்ரீராமரின் பூமியில் தாமரை மலர பைசாபாத் மக்கள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரின் பிரச்சார மேடையின் பின்புறத்தில் ராமர் புகைப்படத்துடன் கூடிய பேனர் கட்டப்பட்டிருந்தது. கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் ராம நாமத்தை உச்சரித்தனர்.

Modi creates controversy over Lord Rama referenc

தேர்தல் பிரச்சாரத்தில் மதத்தையோ, கடவுளையோ முன்னிருத்தி வாக்கு கேட்க கூடாது என்பது விதிமுறை. எனவே இந்த பிரச்சாரம் குறித்து பைசாபாத் தேர்தல் அலுவலகத்திடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

English summary
Amid chanting of Jai Shree Ram slogan and with an image of Lord Rama in the backdrop, BJP prime ministerial candidate Narendra Modi on Monday campaigned from Faizabad in Uttar Pradesh seeking support for party symbol lotus but at the same time courted controversy with the Election Commission by using a religious symbol.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X