மோடிக்கு திருப்பதி லட்டு பிரசாதம்: தேவஸ்தான குழுவினர் வழங்கினர்
டெல்லி: நாட்டின் 15வது பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திரமோடிக்கு திருப்பதி பாலாஜி கோவிலின் லட்டு பிரசாதமும், பட்டு வஸ்திரமும் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.
இந்து சம்பிரதாயப்படி நரேந்திரமோடிக்கு சிறப்பு மரியாதை அளிப்பதற்காக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதைத்தொடர்ந்து நரேந்திரமோடி பெயரில் ஏழுமலையான் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
பின்னர் லட்டு, தீர்த்தப் பிரசாதம், பட்டு வஸ்திரங்கள் ஆகியவற்றை கோவில் அதிகாரிகள், வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் குழு அறங்காவலர் குழு தலைவர் கனுமூரிபாபிராஜு தலைமையில் டெல்லிக்கு சென்றது. அவர்கள் நரேந்திரமோடி பதவி ஏற்கும் முன்பாக, அவரை நேரில் சந்தித்து வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினார்கள்.
அத்துடன் ஏழுமலையானின் வஸ்திரங்களை நரேந்திரமோடிக்கு போர்த்தி தீர்த்தப் பிரசாதம், லட்டு பிரசாதம் வழங்கினார்கள் என தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications