For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. தமிழிலேயே வாழ்த்திய பிரதமர் மோடி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழர்களின் பண்டிகையான பொங்கலுக்கு, பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் தமிழிலேயே வாழ்த்தை பரிமாறிக் கொண்டுள்ளார் மோடி.

தமிழர் பண்டிகையாம், பொங்கல் பண்டிகை நாளை விமரிசையுடன் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு தலைவர்களும் வாழ்த்து செய்திகளை வெளியிட்டுவருகின்றனர். பிரதமர் மோடியும் பொங்கலுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டர் பக்கத்தில், அவர் கூறியுள்ளதாவது: தமிழக மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கடின உழைப்பை வித்திட்ட விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையும் வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

இந்த வாழ்த்து செய்தியை அவர் தமிழிலியே வெளியிட்டுள்ளார். அதேபோல போகியை முன்னிட்டு தெலுங்கு பேசும் மக்களுக்கு, தெலுங்கிலேயே வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார் மோடி. அதில் "போகி நன்னாளில், மக்கள் அனைத்து நலன்களையும் பெற்று நலமோடு வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார் மோடி.

இதேபோல மகரசங்கராந்தி, பட்டம் விடும் திருவிழா, போகி என வடமாநிலங்கள், ஒடிசா, அசாம் போன்றவற்றில் கொண்டாடப்படும் பண்டிகைக்களுக்காக அந்தந்த மொழிகளில், மோடி வாழ்த்து டிவிட் வெளியிட்டு அசத்தியுள்ளார். அதில் சுவாரசியம் என்னவென்றால், ஆங்கிலம், ஹிந்திக்கு அடுத்தபடியாக அதிகமாக ரீடிவிட் ஆனது தமிழில் வெளியான வாழ்த்து செய்திதான்.

English summary
Pongal greetings to friends in TN! Best wishes to our hardworking farmers for a great harvest. May it bring more prosperity in their lives, wishes prime minister Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X