குமார் விஸ்வாஸ் தலைமையில் உடைகிறது ஆம் ஆத்மி? 8 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் வெளியேறுகின்றனர்?
டெல்லி: பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய குமார் விஸ்வாஸ் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி உடைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் 8 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் ஆம் ஆத்மியை விட்டு வெளியே வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் கடந்த செவ்வாய்க்கிழமையன்று டைம்ஸ் நவ் டிவிக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் பிரதமர் மோடியை மிகவும் புகழ்ந்து தள்ளியிருந்தார் குமார் விஸ்வாஸ்.

மோடி பிறந்த நாள்
அத்துடன் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வேன்.. அதை ஆம் ஆத்மி கட்சியினர் யாரேனும் தடுத்தால் கட்சியை விட்டு விலகிவிடுவேன் என்றார்.

கேஜ்ரிவால் மீது தாக்கு
மேலும் வழக்கமான ஒரு அரசியல் கட்சியைப் போல ஆம் ஆத்மி செயல்பட்டால் விலகிவிடுவேன் என்றும் 'அடிக்கடி' கட்சியில் வெளியேறுவது பற்றியே பேசினார்.

பேரம் பேசும் சிடி
இந்த நிலையில் டெல்லியில் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. இது தொடர்பான பேரம் பேசும் சிடியை ஆம் ஆத்மி வெளியிட்டிருக்கிறது. பாஜகவின் இந்த பேரம் பேசுதலுக்கு குமார் விஸ்வாஸ் உடந்தையாக இருந்தார் என்றும் தற்போது கூறப்படுகிறது.

குமார் விஸ்வாஸ் விலகுகிறார்
தற்போது ஆம் ஆத்மி கட்சியில் இருந்து குமார் விஸ்வாஸ் தனது ஆதரவாளர்களுடன் வெளியேறி தனிக் கட்சி தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் 8 எம்.எல்.ஏக்கள் மற்றும் 2 எம்.பிக்கள் வெளியேறக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

பாஜகவுக்கு ஆதரவு?
அப்படி குமார் விஸ்வாஸ் வெளியேறி தனிக்கட்சி தொடங்கினால் அது டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கக் கூடும் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications