'கப்சா' தலைவர்களை 'கப்சிப்' ஆக்கிய சமூக வலைத்தளங்கள்: மோடி புகழாரம்
காந்திநகர்: பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றி பெற நினைத்தவர்களின் பேச்சுக்களை பிரச்சார மேடையை தாண்டி வெளியே பரவாமல் தடுத்தது சமூக வலைத்தளங்கள்தான் என்று நரேந்திரமோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

டுவிட்டரில் கருத்து
இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து பல தொலைக்காட்சிகளின் எக்சிட் போல் வெளியாகியுள்ள நிலையில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் நன்றி
வெற்றிகரமாக தேர்தலை முடித்ததற்காக இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் ஆணையம் மற்றும் ஒட்டுமொத்த தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு வீரர்களையும் சுமுகமாக தேர்தலை நடத்தியதற்காக பாராட்டிக்கொள்கிறேன். சிறந்த தேர்தலை நடத்தி இந்தியா மீண்டும் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.

ஆளும் கட்சி வேஸ்ட்..
இந்த தேர்தலில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்த விஷயம் என்னவென்றால், வாக்குப்பதிவு முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளதுதான். மழையிலும், வெயிலிலும் மக்கள் வந்து வாக்களித்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலுமே ஆளும் கட்சிதான் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும். பிற கட்சிகள் அதற்கு பதிலளிக்க வேண்டி வரும். ஆனால் இந்த தேர்தலில் ஆளும் கட்சி பிரச்சாரத்தை தூண்டுவதாகவும் இல்லை, ஆக்கப்பூர்வமாகவும் இல்லை. வெறுமனே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தது.

சோஷியல் மீடியா
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், வளர்ச்சி, நல்ல நிர்வாகம் ஆகியவற்றில் மட்டுமே பிரச்சார கவனத்தை வைத்திருந்தன. எங்கெல்லாம் நான் சென்னேறேனோ அங்கெல்லாம் உள்ளூர் மக்களுடன் கலந்து பேசினேன். உள்ளூர் பிரச்னைகளை நான் அறிந்துகொள்ள சமூக வலைத்தளங்கள் உதவி செய்தன. இந்த தேர்தலின்போது, தலைவர்கள் அளிக்கும் பொய்யான வாக்குறுதிகள் அந்த பிரச்சார மேடையைவிட்டு வெளியே பரவாமல் சமூக வலைத்தளங்களால்தான் தடுக்கப்பட்டன. இது சமூக வலைத்தளங்களின் மிகப்பெரிய சக்தியை காண்பிக்கிறது. இவ்வாறு மோடி அதில் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications