நீங்க தோத்துட்டா.. 100 தடவை 'உக்கி' போடணும்.. ஆஹா.. மோடிக்கு மம்தா வச்ச டெஸ்ட்டைப் பாருங்க!
பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வித்தியாசமான சவால் ஒன்றை விடுத்து இருக்கிறார்.
கொல்கத்தா: பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வித்தியாசமான சவால் ஒன்றை விடுத்து இருக்கிறார்.
பிரதமர் மோடியின் மேற்கு வங்க பிரச்சாரம்தான் தற்போது தேசிய அரசியலில் வைரல் டாப்பிக். தினமும் மோடி மேற்கு வங்கத்திற்கு சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். நாளுக்கு நாள் இவரது பிரச்சாரத்திற்கு கூட்டம் கூடிக்கொண்டு வருகிறது.

இவர் தனது பிரச்சாரத்தில் மமதா பானர்ஜியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதேபோல் மமதா பானர்ஜி இந்து மதத்தை மிகவும் மோசமாக நடத்துகிறார் என்றும் மோடி விமர்சனம் செய்து வருகிறார்.
நேற்றைய பிரச்சாரத்தில் பேசிய மோடி, மேற்கு வங்கத்தில் நிறைய முறைகேடான நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகிறது. இதை வைத்து பலர் மோசமாக தவறாக சம்பாதிக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பலர், இந்த வேலையை பார்க்கிறார்கள்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிறுத்தி இருக்கும் 42 வேட்பாளர்கள், இது போன்ற நிலக்கரி சுரங்க மாபியாக்கள்தான். இந்த தேர்தலுக்கு பின் மேற்கு வங்கத்தில் ஆட்சி கவிழும். திரிணாமுல் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைவார்கள் என்று, மோடி குறிப்பிட்டார்.
இந்த நிலையில் மோடியின் இந்த பேச்சுக்கு மமதா தற்போது பதில் அளித்துள்ளார். அதில், நான் மோடிக்கு சவால் விடுகிறேன். திரிணாமுல் வேட்பாளர்கள் மீது மோடி ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார். மோடி எங்கள் வேட்பாளர்கள் 42 பேரை குற்றவாளி என்று நிரூபிக்கட்டும்.
அப்படி செய்துவிட்டால், நான் அவர்கள் 42 பேரின் வேட்புமனுக்களை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் அப்படி நிரூபிக்கவில்லை என்றால் மோடி இந்த மக்கள் முன்பு காதில் கை வைத்து 100 தோப்புக்கரணம் போட வேண்டும். இந்த சவாலை ஏற்றுக்கொள்வீர்களா?
நீங்கள் 10 கோடி வேலை கொடுப்பதாக கூறினீர்கள். ஆனால் அந்த வேலைகள் எல்லாம் எங்கே. பாராளுமன்ற அறிக்கையின் படி, மேற்கு வங்கத்தில் நாங்கள் 40% வேலையின்மையை குறைத்து இருக்கிறோம். உங்களால் அதை ஏன் செய்ய முடியவில்லை.
இந்திய வரலாறு குறித்து உங்களால் பேச முடியுமா. உங்களால் முதலில் பேப்பர், டெலிபிராம்ப்டர் இல்லாமல் பேச முடியுமா, என்னுடன் நீங்கள் விவாதம் நடத்த தயாரா என்று மமதா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications