உலக அமைதியின் தூதுவராக இந்தியா திகழ்கிறது - ’மான் கீ பாத்’ உரையில் மோடி பெருமிதம்
உலக அமைதியில் இந்தியாவின் பங்கு குறித்து பிரதமர் மோடி மான் கீ பாத் உரையில் குறிப்பிட்டார்.
டெல்லி: உலக அமைதியின் தூதுவராக இந்தியா திகழ்கிறது என மான் கீ பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் மக்களிடையே ரேடியோ மூலமாக உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நண்பகலில் 'மான் கீ பாத்' உரை ஆற்றினார்.

பிரதமர் மோடியின் மான் கீ பாத் உரை:
இந்தியா எப்போதும் உலக அமைதிக்கும், ஒற்றுமைக்குமே ஆசைப்படுகிறது. இந்தியாவின் இராணுவப் படைகளுக்கும் கூட இதைத்தான் விரும்புகின்றன. இதுவரை 7000க்கும் அதிகமான இந்திய அதிகாரிகள் ஐக்கிய நாடுகளின் சபையோடு இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
உலகிலேயே ஐ.நா.,வில் அதிக அதிகாரிகள் பணியாற்றும் நாடுகளில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இதுவரை இந்திய இராணுவத்தினர் 85க்கும் அதிகமான நாட்டு இராணுவ வீரர்களுக்கு அமைதிப் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி பயிற்சி அளித்து இருக்கிறார்கள்.
அதோடு பல நாடுகளுக்கு நாம் மருத்துவ உதவியும் அளித்து இருக்கிறோம். இந்தியா எப்போதும் உலக அமைதிக்கான தூதுவராக இருந்து வருகிறது.
50க்கும் அதிகமான ஐ.நா.,வின் அமைதி பாதுகாப்பு நடவடிக்கைகளில் நமது நாட்டு இராணுவ வீரர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
மேலும் இந்தியாவின் இறையாண்மையை மதிக்கும் பண்பு, காதி நிறுவனத்தின் வருமானத்தை அதிகப்படுத்தும் வழிமுறைகள், தூய்மை இந்தியா ஆகியவற்றையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதோடு குழந்தைகள் சிறுவயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாவதையும் அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடும் என்றும் உறுதியளித்தார். இந்தியாவில் நடக்கவிருக்கும் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு வாழ்த்துகளையும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications