ரஜினி சிறந்த நடிகர்.. மோடி சிறந்த பிரதமர்.. 2 பேரும் சந்திக்கட்டுமே… வெங்கய்ய நாயுடு ஹேப்பி
சிறந்த நடிகரான ரஜினியும் சிறந்த பிரதமரான மோடியும் சந்திக்கட்டுமே என்று வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். இருவரின் சந்திப்பை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: நடிகர் ரஜினிகாந்த் பிரதமரை சந்திப்பதை தாம் வரவேற்பதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். சிறந்த நடிகர் ரஜினியும் சிறந்த பிரதமர் மோடியும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.
தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவர், கடைசி நாள் பேசிய அரசியல் உரை, அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக துடிப்பு
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் ரஜினி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இந்தப் பேச்சைப் பிடித்துக் கொண்டு தமிழகத்தில் காலூன்றிவிட வேண்டும் என்று பாஜக துடியாய் துடித்து வருகிறது.

மோடி-ரஜினி சந்திப்பு
இதனையடுத்து, ரஜினிகாந்த்திற்காக பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என அதன் தேசிய தலைவர் அமித் ஷா நேற்று அறிவித்தார். இதனிடையே, ரஜினிகாந்த் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கப் போகிறார் என்று செய்தி வெளியானது. இதுகுறித்து பெங்களூருவில் மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடுவிடம், குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

சிறந்த நடிகர் ரஜினி
இதற்கு, இந்த சந்திப்பு குறித்து தமக்குத் தெரியாது என வெங்கய்ய நாயுடு பதிலளித்தார். இருப்பினும் ரஜினி மோடியை சந்தித்தால் அதை வரவேற்பதாக கூறிய அவர், ரஜினி சிறந்த நடிகர் என்றும், மோடி சிறந்த தலைவர் என்றும் கூறினார். இருவரும் சந்திக்க விரும்பினால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் வெங்கய்ய நாயுடு கூறினார்.

ரஜினியின் பலம்
அதே போன்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை கோவையில் செய்தியாளர்களிடம் பேசும் போது, நடிகர் ரஜினிகாந்த் பாஜகவிற்கு வந்தால் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்று கூறினார். பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா முதல், அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை வரை ரஜினிகாந்த்தின் ‘பாஜக ஆதரவு' அறிவிப்பிற்காக காதை திறந்து வைத்து காத்திருக்கிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications