பிரதமாக இருக்கும் தகுதியை மோடி இழந்து வருகிறார் : சித்தராமையா தாக்கு
நாட்டின் பிரதமராக இருக்கும் தகுதியை மோடி இழந்து வருகிறார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.
பெங்களூரு : நாட்டின் பிரதமாக இருக்கும் தகுதியை சமீபகாலமாக பிரதமர் மோடி இழந்து வருகிறார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது.

இந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடு பாஜக செயல்பட்டு வருகிறது. அதற்காக இதுவரை இரண்டு முறை பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி இருக்கிறார் பிரதமர் மோடி.
தனது பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி குறித்தும், முதல்வர் சித்தராமையாவின் ஆட்சி குறித்தும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து வருகிறார். தற்போதைய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள மோடி, காங்கிரஸ் அரசை கமிஷன் அரசு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய சித்தராமையாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நாடு முழுவதும் பாஜக ஏற்படுத்தி வரும் பிரச்னைகள் குறித்து பிரதமர் வாய் திறப்பதே இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய பொறுப்பற்ற கருத்துகளை மட்டுமே அவர் பேசுகிறார்.
சமீபகாலங்களில் நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய தகுதியையே அவர் இழந்து வருகிறார். கர்நாடக தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பாஜக மனக்கோட்டை கட்டி வருகிறது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications