லண்டனை போல் தெலுங்கானாவை மாற்றுவேன்னு சொன்னீங்களே.. பிரதமர் மோடி கேள்வி
Recommended Video

நிஜாமாபாத்: லண்டனை போல் தெலுங்கானா மாநிலத்தை மாற்றிக் காட்டுவேன் என்று சந்திரசேகரராவ் கூறியது என்னானது என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
தெலுங்கானாவில் வருகிற 7-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 119 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில், சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தீவிரமாக உள்ளது.

காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு, தெலுங்கானா ஜன சமிதி ஆகிய 4 கட்சிகளும் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்கிறது. இதற்கிடையே பாஜகவும் களத்தில் உள்ளது.
இந்தநிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நிஜாமாபாத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆகிய இரு கட்சிகளும் வம்ச அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளன. இந்த இருகட்சிகளும் நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன. இரு கட்சிகளும் சிறுபான்மையினரை சமாதானப்படுத்தும் பணியை செய்கின்றனர்.
ஆயுஷ்மண் பாரத் 2 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது, 3 லட்சம் குடும்பங்கள் அதன் மூலம், நன்மை பெற்றுள்ளன. தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், மக்களின் நல்வாழ்க்கை காப்பாற்றப்பட்டு வருகின்றன. ஆனால், தெலுங்கானாவில் இருந்து ஒரு நபர் கூட அதன் பயன்களை பெறவில்லை, அதற்கு காரணம், உங்கள் முதல்வர் தான் என்று கூறினார்.
லண்டனை போல் மாநிலத்தை மாற்றுவேன் என்று முதல்வர் சந்திரசேகரராவ் கூறினார். ஆனால், இந்த தெலுங்கானாவின் நிலையை பாருங்கள் என்று சுட்டிக்காட்டினார்.
காங்கிரசின் பாதையில் இந்த மாநிலத்தின் முதலமைச்சர் செல்கிறார். ஆனால், மாநிலத்தின் வளர்ச்சியை பற்றி இளைஞர்களுக்கு நன்றாக தெரியும் அதனை முதல்வர் சந்திரசேகரராவ் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
ஆனால், தேர்தல் கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர்












Click it and Unblock the Notifications