For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளிர் தினத்தில் மோடியை நெகிழச் செய்த 106 வயது பாட்டி.. ஆடுகளை விற்று கழிப்பறை கட்டியவர்!

மகளிர் தினமான இன்று தன்னை ஈர்த்த பெண் சட்டீஸ்கரைச் சேர்ந்த பாட்டி குன்வர் பாய் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிய 106 வயது குன்வர் பாய் என்ற பெண்மணியை மகளிர் தினமான இன்று தனது டிவிட்டர் நினைவு கூர்ந்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், தூய்மை இந்தியா திட்டத்திற்கு உதாரணமாகத் திகழ்ந்ததாக சட்டீஸ்கரைச் சேர்ந்த குன்வர்பாய் என்ற பாட்டியை நினைவு கூர்ந்துள்ளார்.

 remembers kunwar bai on womens day

மேலும் இது தொடர்பாக அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

''இந்தியாவில் ஏராளமான பெண்கள் மனிதநேயம் எனும் வரலாற்றில், தங்கள் தியாகத்தின் மூலம் அழிக்கமுடியாத அடையாளத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளனர். நீங்களும் உங்கள் வாழ்வில் உங்களைப் பாதித்த, தாக்கத்தை ஏற்படுத்திய பெண்கள் குறித்து '#SheInspiresMe’ என்ற ஹாஸ்டாக்கை பயன்படுத்தி கருத்துக்களைப் பகிருங்கள்.

இன்று நான் பிரச்சாரம் செய்துவரும் ஸ்வச்பாரத் (தூய்மை இந்தியா) திட்டத்துக்கு முன்னோடியாக இருந்தவர் சட்டீஸ்கர் மாநிலம், கோத்தாபாரி கிராமத்தைச் சேர்ந்த 106 வயது குன்வர் பாய் என்ற மூதாட்டி.

தன்னிடம் இருந்த ஒரே சொத்தான ஆடுகளை விற்பனை செய்து 2 கழிப்பறைகளை அவர் கட்டினார். இன்று அவர் உயிரோடு இல்லாவிட்டாலும் அவரின் தியாகம் நமது நினைவில் இருக்கிறது. ஸ்வாச் பாரத் திட்டம் இருக்கும்வரை குன்வர் பாயின் பங்களிப்பை நம்மால் மறக்க முடியாது. அவரின் பங்களிப்பு என்னை நெகிழச் செய்கிறது.

சட்டீஸ்கர் மாநிலத்துக்கு சென்றபோது, குன்வர் பாயிடம் ஆசிபெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்புடன் செயல்படும் அனைவரின் மனதிலும், சிந்தனையிலும், எப்போதும் குன்வர் பாய் வாழ்ந்து கொண்டு இருப்பார்” என இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், 'குன்வர் பாய் என்ற பெண்தான் என்னை ஈர்த்தவர் #SheInspiresMe'' என ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ள மோடி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குன்வர் பாயுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

English summary
On International Women's Day, Prime Minister Narendra Modi took to Twitter to talk about a 106-year-old woman who had inspired him, and urged others to
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X