3 ஆண்டுகள்... 62 நாடுகள்… சுற்றிப்பார்த்து சாதனை படைத்த பிரதமர் மோடி
பிரதமராகப் பதவியேற்று 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், 62 நாடுகளை சுற்றிப் பார்த்து சாதனை படைத்துள்ளார் பிரதமர் மோடி.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாண்டுகளில், 62 வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு சாதனைப் படைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, பதவியேற்றது முதலே, தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.இதுபற்றி எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தாலும் அதை அவர் கண்டுகொள்வதில்லை.

சர்வதேச அளவில், இந்தியாவின் உறவுகளை மேம்படுத்தும் வகையில், அவர் தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருவதாக, ஆளும், பா.ஜ.க, கூறி வருகிறது. ரஷ்யா, ஸ்பெயின் உட்பட நான்கு நாடுகளுக்கு, சில நாடகக்குழு முன்னர் , அவர் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
நாடு திரும்பிய உடன், உடனடியாக, கஜகஸ்தானில் நடைபெற்ற, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டார். இது, மூன்றாண்டுகளில் அவரது, 62 வெளிநாட்டு பயணமாகும்.
மூன்றாண்டுகளில், அமெரிக்காவிற்கு, நான்கு முறையும், பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிற்கு, மூன்று முறையும். சீனா, ஜப்பான், ஜெர்மனி நேபாளம், இலங்கை, சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கு தலா இரண்டு முறையும் சென்று வந்துள்ளார்.
இது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறுகையில், ' அண்டார்டிகாவை தவிர, அனைத்து கண்டங்களுக்கும் சென்று வந்துள்ளார் மோடி . குறிப்பாக, வலிமை படைத்த நாடுகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் அதிக அளவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 'சார்க்' எனப்படும் தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளில் அதிக முறைகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்' என்று தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications