அமைச்சர்கள் நியமனம்.. மோடியின் புரட்சிகரமான முடிவு.. !
டெல்லி நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பேஸ்புக் பக்கத்தில் மக்களுக்கு ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது.....
அமைச்சர்கள் நியமனத்தில் நரேந்திர மோடி புதிய வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். முதல் முறையாக, சிறிய அரசு.. அதிகபட்ச ஆளுமை என்ற புதிய கொள்கையை அவர் அறிமுகப்படுத்துகிறார். மேலும், பணியாற்றும் கலாச்சாரம் மற்றும் ஆட்சி நடைமுறையிலும் புதிய மாற்றத்தை அவர் கொண்டு வரவுள்ளார்.
அமைச்சர்களை குவிப்பதற்குப் பதில் சிறிய அளவிலான அமைச்சரவையை அவர் ஏற்படுத்துகிறார். இது பல்வேறு துறைகளுக்கிடையே ஒருங்கிணைந்து திறமையாக செயல்படஉதவும். மேலும் திறமையான நிர்வாகத்தைக் கொடுக்கவும் முடியும். பணியும் வேகமடையும்.
ஒரு கேபினட் அமைச்சர் தலைமையில் பல அமைச்சர்கள் செயல்படுவார்கள். இதனால் பல அமைச்சகங்களின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு வேலைகள் சிறந்த முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய முடியும்.
மக்களிடம் அதிக அளவில் எதிர்பார்ப்புகள் இருப்பதை மோடி அறிவார். இதை மனதில் கொண்டே கடந்த நா்ன்கு நாட்களாக அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக தீவிர ஆலோசனைகள், விவாதங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கு முன்பு அரசியல் ஸ்திரமின்மை, சிறுபான்மை, கூட்டணி அரசுகள் இருந்து வந்த காரணத்தால் பல அமைச்சகங்கள் பிரிக்கப்பட்டு ஏராளமான அமைச்சர்களை நியமிக்கும் நிலை இருந்தது. தற்போது அந்த நிலை இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications