மோடியின் பிரதமர் கனவு பலிக்காது... மீண்டும் மத்தியில் காங். ஆட்சி அமைக்கும்: ஏ.கே.அந்தோணி
திருவனந்தபுரம்: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். மோடியின் பிரதமர் கனவு பலிக்காது என தெரிவித்துள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் பாகிஸ்தான் ஏஜெண்ட்டுகள் எனக் குற்றம் சாட்டியிருந்தார் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான மோடி.

அதற்குப் பதிலடி தரும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே.அந்தோணி, மோடியின் பிரதமர் கனவு பலிக்காது. பிரதமர் பதவிக்கு போட்டியிடுபவர் போன்று மோடி பேசவில்லை என விமர்சித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும். மோடி அலை வீசுகிறது என்று பாரதீய ஜனதா கட்சியினர் பிரசாரம் செய்து வருகிறார்கள். தற்போது அந்த அலையை காணவில்லை. அதே போல பாரதீய ஜனதாவும் இந்த தேர்தலில் காணாமல் போய்விடும். மோடியின் பிரதமர் கனவு பலிக்காது. மோடியின் ஆபத்தான சில கொள்கைகள் இந்தியாவை சின்னாபின்னாமாக்கி விடும் அபாயம் உள்ளது.
குஜராத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதாக கூறுகிறார்கள். அங்கு சென்று பார்த்தால் தான் அது எப்படிப்பட்ட மாற்றம் என்பது தெரிய வரும்' என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications