முதல் 'மேட்சிலேயே' முச்சதம் போட்டுட்டாரே மோடி.. 'சபாஷ்' போடும் அத்வானி!!
டெல்லி: பிரதமர் மோடியை பேட்ஸ் மேனாக இருந்து கேப்டனாக உயர்ந்தவர் எனப் புகழ்ந்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி, மேலும் அவர் தனது முதல் ஆட்டத்திலேயே மூன்று செஞ்சுரிகளைப் போட்டுள்ளதாக லோக்சபா தேர்தல் வெற்றியைப் பாராட்டியுள்ளார்.
டெல்லியை அடுத்துள்ள சூரஜ்குந்த் நகரில், பாஜக சார்பில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவிற்கு முதன்முறையாக தேர்வாகியுள்ள புதிய எம்.பி.க்களுக்கான 2 நாள் பயிலரங்கம் நடந்தது. இதில், சுமார் 150-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ‘எம்.பி.க்கள் பொது வாழ்வில் தூய்மையை கடைபிடிக்கவேண்டும் என்றும், எம்.பி.க்கள் தங்களுக்குள்ளான பிரச்சினைகளை பொது இடங்களில் பேசக் கூடாது எனவும் அறிவுரை வழங்கினார்.
இரண்டாம் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மூத்தத் தலைவர் அத்வானி, ‘பாஜக எம்.பிக்கள் சர்ச்சைக்குரிய விசயங்களில் எதிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம்' என அறிவுரை வழங்கினார்.
மேலும், அத்வானி தனது பேச்சினூடே பிரதமர் மோடியை கிரிக்கெட் கேப்டனுடன் ஒப்பிட்டுப் பேசினார். அதாவது, ‘பேட்ஸ் மேனாக இருந்து கேப்டன் ஆன மோடி முதல் டெஸ்ட் போட்டியிலேயே 3 செஞ்சுரி அடித்து சாதனை படைத்துள்ளார்' என நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியதை மறைமுகமாகப் பாராட்டினார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications