இந்திய வளர்ச்சிக்கு 3 கோடி வெளிநாடு இந்தியர்களின் பங்கு ஆபாரம்.. மோடி புகழாரம்
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. அதில் 3 கோடி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர் என்று மோடி கூறியுள்ளார்.
பெங்களூரு: வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பணம் ஈட்டி இந்தியாவிற்கு அனுப்புவதன் மூலம் அதன் வளர்ச்சிக்கு அதிகம் பங்காற்றியுள்ளனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியாவின் தந்தை என்று புகழப்படும் காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாள் ஜனவரி 9. அந்த நாளை வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 14வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினத்திற்கான கூட்டம் இன்று பெங்களூருவில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மலேசியா, மொரிஷியஸ், போர்ச்சுக்கல், சூரிநாம், உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், கர்நாடக முதல்வர் சித்தராமையா கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:
தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி இந்தியா திரும்பிய நாளான இன்று வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நாளாகக் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் சுமார் 30 மில்லியன் இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அங்கு பணம் சம்பாதித்து அதனை இந்தியாவிற்கு அனுப்பி வருகின்றனர். இதனால் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் பெரும் பங்காற்றி வருகிறார்கள்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தூதரகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு நல்கி வரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications