4 மாநில தேர்தல் முடிவுகள் கவனத்தை ஈர்க்கும் வெற்றி: டுவிட்டரில் மோடி நன்றி

நடந்து முடிந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், டெல்லி ஆகிய நான்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதாவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் அந்தக் கட்சி பெரும்பான்மை பெற்று விட்டது. டெல்லியில் பாரதீய ஜனதா தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது.
இத்தேர்தல் பிரச்சாரத்தில் மோடியின் பக்கு இன்றியமையாதது. அவரது சூறாவளி சுற்றுப்பயணக்களும், தீவிர பிரச்சாரமும் வெற்றிக் கான முக்கியக் காரணம் எனலாம். இந்நிலையில், தேர்தல் வெற்றிக்காக அரும்பாடு பட்டவர்களுக்கு தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார் மோடி.
இது குறித்து தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற வெற்றி, கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைத்த கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங், கட்சியின் முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தேர்தல் வெற்றிக்காக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்வர் வேட்பாளர் வசுந்தரா ராஜே சிந்தியா, சத்தீஷ்கார் முதல்வர் ராமன் சிங், டெல்லி முதல்வர் வேட்பாளர் ஹர்ச வர்தன் ஆகியோருடன் நரேந்திரமோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ‘டுவிட்டர்' சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டுள்ள தகவலில், ‘சிவராஜ் சிங்ஜியிடம் பேசி, மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் கண்ட அமோக வெற்றிக்காக பாராட்டு தெரிவித்தேன். வசுந்தராஜியிடம் பேசினேன். ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக பாராட்டினேன்' எனத் தெரிவித்துள்ளார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications