பாட்னா குண்டுவெடிப்புக்கு நரேந்திர மோடி கண்டனம்
பாட்னா: பாட்னாவில் தான் பேசிய மேடைக்கு அருகே நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து தனது பேச்சின்போது எதுவும் குறிப்பிடாத குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இதுகுறித்து டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று பாட்னாவில் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 7 குறைந்த சக்தி கொண்ட குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் தனது பொதுக்கூட்ட பேச்சின்போது மோடி இதுகுறித்து எதுவும் கூறவில்லை.

இருப்பினும் கூட்டத்திற்குப் பின்னர் டிவிட்ரில் இதுகுறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பாட்னாவில் நடந்த குண்டுவெடிப்புகள் பெரும் சோகத்தை தருகின்றன. வருத்தம் தருகின்றன. துரதிர்ஷ்டவசமானது இது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மோடி.












Click it and Unblock the Notifications