இலங்கை விவகாரங்களுக்கு சிறப்பு பிரதிநிதி - பிரதமர் நரேந்திர மோடி முடிவு?
டெல்லி: இலங்கை விவகாரங்களைக் கவனிக்க சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்ய இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை பிரச்சனையில் கடந்த 25 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக வெளியுறவுத் துறை அதிகாரிகள், ரா மற்றும் ஐ.பி. அதிகாரிகளே இருந்து வருகின்றனர்.

இதனால் எத்தகைய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட போதும் பிரதமர்கள் மாறிய போதும் இந்தியாவின் இலங்கை கொள்கை என்பது அந்நாடுடன் அனுசரித்துப் போகின்ற கொள்கையாக இருந்து வருகிறது. இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் எழும் எந்த குரலையும் மத்திய அரசு கேட்பதாகவே இருந்ததே இல்லை.
அதே நேரத்தில் தற்போதைய மோடி அரசாங்கம் பதவியேற்கும் போது இலங்கை அதிபர் ராஜபக்சேவை பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டது. அதுவரை மோடி அரசுடன் நல்லுறவை பேணுவதாக கூறி வந்த தமிழக அரசும் கூட ராஜபக்சே வருகையை கடுமையாகவே கண்டித்து எதிர்ப்பும் தெரிவித்தது. பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான மதிமுகவும் கூட டெல்லியில் போராட்டம் நடத்தியது மோடிக்கு பெரும் நெருக்கடியாகவே கருதப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம், நரேந்திர மோடி சற்று காட்டமாகவே இந்தியத் தரப்பின் கருத்துகளை முன்வைத்ததாக கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையில் கால் பதித்த உடனேயே இந்தியா தொடர்புடைய சம்பூர் அனல்மின் நிலைய திட்டத்தை உடனே செயல்படுத்த மகிந்த ராஜபக்சே உத்தரவிட்டார்.
இதனிடையே இலங்கை விவகாரங்களைக் கவனிப்பதற்காக தமது நேரடி சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்க பிரதமர் மோடி ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தமது ஆட்சிக்காலத்தில் இலங்கை விவகாரங்களுக்கு மட்டும் ஜி. பாரத்தசாரதியை சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருந்தார். அதேபோல் இலங்கை விவகாரங்களை தமது சார்பில் நேரடியாக கையாளக் கூடிய சிறப்பு பிரதிநிதியை நியமிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
அப்படி நியமிக்கப்படும் சிறப்பு பிரதிநிதியானவர் வெளியுறவு அமைச்சர், செயலர், தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் மேலானவராக செயல்படக் கூடும் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications