தானேவில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த மதரஸா ஆசிரியருக்கு வலை
தானே: தானேவில் மதரஸா ஒன்றில் ஆசிரியரால் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில் உள்ள மும்ரா பகுதியில் மதரஸா ஒன்றில் இம்மாதம் 12ம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி 4ம் வகுப்பு (9 வயது) மாணவி ஆவார்.

அரபிக் கற்றுக் கொள்வதற்காக மதரஸா சென்றுள்ளார் இச்சிறுமி. அப்போது அங்கு ஆசிரியரான நூருல்லா அன்சாரி என்பவர், சிறுமியை தனிமையில் அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் அவர் மிரட்டியுள்ளார். இதனால் இந்த சம்பவம் குறித்து அச்சிறுமி யாரிடமும் கூறவில்லை. ஆனால், மிரட்சியுடன் சிறுமி காணப்பட்டதைக் கண்டு, அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். இரண்டு நாட்களுக்குப் பின்னரே நடந்த சம்பவம் குறித்து அச்சிறுமி தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அன்சாரி மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், அதற்குள்ளாக அன்சாரி தலைமறைவாகி விட்டார்.
தற்போது இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அன்சாரியையும் தேடி வருகின்றனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications