பஞ்சாபில் ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை: கீழே குதித்த தாய் காயம், மகள் பலி

Subscribe to Oneindia Tamil

மோகா: பஞ்சாப் மாநிலத்தில் பேருந்தில் கண்டக்டரின் உதவியாளர் அளித்த பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க தாயும், மகளும் கீழே குதித்தனர். இதில் 13 வயது மகள் பலியாகியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் மோகா நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 35 வயது மனைவி தனது 13 வயது மகள் மற்றும் 14 வயது மகனுடன் உறவினரை சந்திக்க பேருந்தில் அருகில் உள்ள கிராமத்திற்கு புதன்கிழமை மாலை கிளம்பினார். பேருந்தில் ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்தனர். பேருந்து மோகா நகரில் இருந்து 10 கிமீ சென்ற பிறகு கண்டக்டரின் உதவியாளர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தார்.

Molested, mom & girl jump off bus, daughter dies in Punjab

இது குறித்து அந்த பெண் கண்டக்டரிடம் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அந்த பெண் டிரைவரிடம் பேருந்தை நிறுத்துமாறு கூற அவரும் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் தனது மகளுடன் ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்தார். இதை பார்த்த டிரைவர் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். கண்டக்டரும், அவரது உதவியாளரும் தப்பியோடிவிட்டனர்.

அந்த வழியாகச் சென்றவர்கள் படுகாயம் அடைந்த தாய் மற்றும் மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி மகள் இறந்துவிட்டார். தாய் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+