"ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி- திடுக் தகவல்
பெங்களூர்: நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான அடையாள சான்றான ஆதார் அடையாள அட்டையை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை பெறும் நிறுவனத்துக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ நிதி உதவி செய்து வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆதார் அடையாள அட்டை தொடர்பான தகவல்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒப்பந்தத்தை "MongoDB" என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் பெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.
ஆனால் "MongoDB" நிறுவனத்துக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ கணிசமான நிதி உதவி வழங்கி வருவது அம்பலமாகியுள்ளது. இந்த MongoDB நிறுவனம் 2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இதன் முதலீட்டாளர்களில் ஒருவராக MongoDB நிறுவனம் அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டிருப்பது In-Q-Tel என்ற நிறுவனத்தை. இந்த In-Q-Tel நிறுவனத்துக்கு நேரடியாக சிஐஏ அமைப்பு நிதி உதவி அளிக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க ஆதார் நிர்வாகிகளோ, MongoDB நிறுவனமோ.முன்வரவில்லை. ஆதார் அடையாள அட்டைக்கான தலைமை நிர்வாகியான நந்தன் நிலகேனியும் மெளனம் சாதித்தே வருகிறார். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கூடவுள்ள நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications