டிரைவர் தூங்கிய கேப்பில் பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குரங்கு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தை ஓட்டி குரங்கு ஒன்று விபத்து ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட்டில் பேருந்து நிலையத்தில் பல பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. அப்போது ஒரு பேருந்தின் கண்டக்டர் பயணிகளை அழைக்க சென்றுவிட்டார். பேருந்து புறப்பட்ட அரை மணிநேரம் இருந்ததால் டிரைவர் கடைசி இருக்கையில் படுத்து தூங்கிவிட்டார்.

Monkey

அந்த நேரம் குரங்கு ஒன்று பேருந்தில் ஏறி டிரைவரின் இருக்கையில் அமர்ந்தது. அது பேருந்தின் சாவியை திருகி வாகனத்தை ஸ்டார்ட் செய்து கியரையும் போட்டது. இதனால் பேருந்து நகரத் துவங்கியது. தூங்கிக் கொண்டிருந்த டிரைவர் எழுந்து ஓடி வந்து குரங்கை விரட்டினார். குரங்கு உடனே பேருந்தில் இருந்து கீழே குதித்து ஓடிவிட்டது.

அதற்குள் அந்த பேருந்து அங்கு நின்று கொண்டிருந்த மேலும் 2 பேருந்துகள் மீது மோதியது. டிரைவர் இல்லாமல் பேருந்து ஒன்று வந்ததை பார்த்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

உத்தர பிரதேசத்தில் ஒரு சில பேருந்து நிலையங்களில் குரங்குகள் பெரும் பிரச்சனையாக உள்ளது. வாகனங்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+