நாடாளுமன்ற கட்டடத்திற்குள் புகுந்து அரை மணி நேரம் அலப்பறையைக் கொடுத்த குரங்கு!!
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் வெளிநடப்புகளும், அமளிகளும் அனலை கிளப்பி வருகின்றன. நாடாளுமன்றத்தினுள் நுழைந்த குரங்கு ஒன்று, உடனே வெளிநடப்பு செய்யாமல் சுமார் அரை மணிநேரம் அங்கு தனது சேட்டையை அரங்கேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 10 தினங்களுக்கு மேலாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தின் நூலக அறையினுள் நுழைந்த குரங்கு ஒன்று, அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் விழி பிதுங்கி, அங்கும் இங்கும் ஓடி கொண்டும், வயர்களை பிடித்து தொங்கிய வண்ணம் தனது குரங்கு சேட்டையை அரங்கேற்றிக் கொண்டிருந்தது.

முக்கிய அதிகாரிகள், நாடாளுமன்ற ஊறுப்பினர்கள், அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் அமரும் முக்கிய பகுதியை அங்கு பாதுகாப்புக்கு இருந்த அலுவலர்கள் விரைந்து வந்து மூடியுள்ளனர். சுமார் அரை மணிநேரம் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த குரங்கு, கடைசியாக விஐபிக்கள் செல்லும், முக்கிய கதவு வழியாக வெளியேறியது.
குரங்கை விரட்ட வருமாறு, நாடாளுமன்ற பாதுகாப்பு வீரர்களை, நூலக அலுவலர் அழைத்தும் யாரும் வரவில்லை. அதேநேரம், குரங்கை விரட்டுவதற்கு பயன்படுத்தப்படும் லங்கூர் குரங்குகளும் இல்லாததால் குரங்கை விரட்டுவதில் சிக்கல் நிலவியுள்ளது.
நாடாளுமன்ற வளகத்தினுள் வரும் குரங்குகளை விரட்ட லங்கூர் குரங்குகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் லங்கூர் குரங்குகளின் பணிக்காலம் முடிவடைந்து, அதன் சேவைகள் வேண்டாம் என கூறி கடந்த ஜூன் மாதத்தில் அதன் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது .
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications