நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21-ல் தொடக்கம்- அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!
டெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜூலை 21-ந் தேதி முதல் ஆகஸ்ட் 18-ந் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நடத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத் தொடரில் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளன.
ஐ.பி.எல். நிதி மோசடியில் சிக்கியுள்ள லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ஆகியோர் உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. இதனை பாரதிய ஜனதா கட்சி தலைவர்களும் சமாளித்து வருகின்றனர்.

இந்த இருவரும் பதவி விலகியாக வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் பிடிவாதமாக உள்ளது. இதேபோல் விவசாயிகள் தற்கொலை பிரச்சனையும் மத்திய அரசுக்கு தலைவலியாக உள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை ஜூலை 21-ந் தேதி முதல் ஆகஸ்ட் 18-ந் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்துள்ளது.
இக்கூட்டத் தொடரில் நில ஆர்ஜித மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கும். அதே நேரத்தில் லலித் மோடி விவகாரம், விவசாயிகள் பிரச்சனை, மியான்மர் தாக்குதல் உள்ளிட்டவை எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும். இதனால் வரும் கூட்டத் தொடரிலும் அனல் பறக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications