For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்.. தெலுங்குதேசம் நோட்டீஸ்

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்திருக்கிறது தெலுங்குதேசம்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டும் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்- தெலுங்கு தேசம் முடிவு- வீடியோ

    டெல்லி: பாஜக தலைமையிலான மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு தெலுங்குதேசம் நோட்டீஸ் அளித்துள்ளது.

    தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்ட போது ஆந்திராவுக்கு சிறப்பு நிதி, சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் முந்தைய மற்றும் தற்போதைய மத்திய அரசுகள் இதனை நிறைவேற்றவில்லை.

    Monsoon Session: TDP moves no-confidence motion against Modi govt

    இதற்கு எதிராக ஆந்திரா அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆந்திராவுக்கு அளித்த வாக்குறுதியை மீறிய மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதில் முனைப்புடன் இருக்கிறது.

    இதற்காக காங்கிரஸ்- பாஜக அல்லாத கட்சிகளின் ஆதரவை கேட்டு வருகிறது தெலுங்குதேசம். தற்போது தெலுங்குதேசம் எம்.பி. சீனிவாஸ் கேசினேனி லோக்சபா செயலாளரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்.

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் நாளையே இத்தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெலுங்குதேசம் வலியுறுத்தியுள்ளது. இதனிடையே மத்திய அரசுக்கு எதிராக தங்களது போராட்டத்துக்கு ஆதரவு தரக் கோரி ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவை தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்தது.

    English summary
    The Telugu Desam Party on Tuesday moved a no-confidence motion against the Modi government for its failure to accord special category status to Andhra Pradesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X